‘உலகிலேயே சகிப்புத்தன்மை மிகுந்தவர்கள் மலேசியப் போலீசாரே’

jaslanமலேசியப்  போலீசாரே  “உலகில்  மிகவும்  சகிப்புத்தன்மை  நிறைந்தவர்கள்” எனப்  போற்றிப்  பாராட்டுகிறார்  உள்துறை  துணை  அமைச்சர்  நூர்  ஜஸ்லான்  முகம்மட்.

துணை  அமைச்சராகி  மூன்று  வாரங்களே  ஆகும்  பொதுக்  கணக்குக்குழுவின்  முன்னாள்  தலைவரான  நூர்  ஜஸ்லான்,  பெர்சே 4-க்குத்  தடை விதிக்கும்  போலீசின்  முடிவை  ஆதரிப்பதாகக்  கூறினார். அப்படிக் கூறியதுடன்  மலேசியப்  போலீசாரைப்போல்  சகிப்புத்தன்மை  மிக்கவர்கள்  வேறு  எங்குமில்லை  என்றும்  சொன்னார்.

“பெர்சே  போலீசை  மதிக்க  வேண்டும். மக்களின்  பாதுகாப்புக்குப்  போலீசாரே  பொறுப்பு. சட்டத்தைச்  செயல்படுத்தும்  அதிகாரத்தை  அரசாங்கம்  அவர்களுக்குக்  கொடுத்துள்ளது.

“உலகில்  வேறு  எந்த  நாட்டிலும்  மலேசியப்  போலீசாரைப்  போன்று  சகிப்புத்தன்மை  மிக்கவர்களைப்  பார்க்க  இயலாது”, என்றவர்  கூறியதாக  ஸ்டார் ஆன்லைன்  அறிவித்துள்ளது.