-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஆகஸ்ட் 21, 2015
மலேசிய கல்வி அமைச்சு தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளில் மலாய் மொழியின் தரமும் தேசியப்பள்ளிகளின் தரமும் ஒன்றிணைக்கப்படும் என அறிவித்துள்ளது.
தமிழ் மற்றும் சீனப்பள்ளிகள் இந்த நாட்டில் 100 ஆண்டுகள் வரலாறு கொண்டவை. அவற்றுக்கென்று தனித்தன்மைகளும் சிறப்பு அம்சங்களும் உள்ளன.
உள்நோக்கம் என்ன?
உலகில் மூத்த மொழிகளான தமிழும் சீனமும் இந்த நாட்டில் கற்றல் கற்பித்தலில் இணைந்திருகின்றன என்பதே இந்த நாட்டிற்கு ஒரு பெருமையான விசயம். நிலைமை இப்படி இருக் , மலேசிய கல்வி அமைச்சு புதிதாக திட்டம் ஒன்றை கொண்டு வந்திருப்பது நாம் அனுபவித்து வரும் இந்தத் தனித்தன்மைகளுக்கு பங்கம் வருமோ என்று அஞ்சத்தோன்றுகிறது.
தமிழ் மற்றும் சீன மாணவர்களுக்கும் சுமை இல்லாமல் அதே வேளையில் மலாய் மாணவர்களுக்கும் சுமையில்லாமல் ,தேசிய பள்ளிகளின் மலாய் பாடத்தின் தரத்தை கொஞ்சம் கீழே இறக்கி , தமிழ் சீனப்பள்ளிகளில் போதிக்கப்படும் மலாய் பாடத்தின் தரத்தை கொஞ்சம் மேலே உயர்த்தி ஒரே பாடத்திட்டமாக கொண்டு வருவதுதான் இந்த புதிய பாடத் திட்டமாம்.
தமிழ்ப்பள்ளிகள் எதிர் நோக்கும் கட்டப் பிரச்சனை, நிலப்பிரச்சனை , ஆசிரியர் பற்றாக் குறை , வகுப்புகள் பற்றாக்குறை, மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி , அதிகமாக இந்திய பெற்றோர்கள் உள்ள இடங்களில் தமிழ்ப்பள்ளிகள் இல்லாமை போன்ற எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க இவற்றிளெல்லாம் கல்வி அமைச்சு கவனம் செலுத்தாமல் மலாய் மொழி பாடத்தில் மட்டும் கவனம் செலுத்துவதன் உள் நோக்கம் என்ன ?
தமிழ் சீனப்பள்ளிகளை மூடும் திட்டத்திற்கு புத்துயிரா?
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்ப்பள்ளி மாணவர்களில் 60-70 விழுக்காட்டினர் யுபிஎஸ்ஆர் மலாய் மொழியில் தேர்ச்சி அடைகிறார்கள். முன்பு இருந்ததை விட இது ஒரு பெரிய முன்னேற்றம். அறிமுகப்படுத்தவிருக்கும் இந்த புதிய பாடத்திட்டம் மாணவர்களுக்கு மேலும் சிரமத்தை கொடுத்து அவர்களின் தேர்ச்சி விகிதத்தை குறைக்கும் என்று உறுதியாகக் கூறலாம். அதனால் மேலும் அதிகமான மாணவர்கள் புதுமுக வகுப்பிற்குள் தள்ளப்படுவார்கள். அதனால் நேரடியாக முதலாம் ஆண்டிற்கு செல்லும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் என்ணிக்கை மேலும் சரிவுரும். பெற்றோர்களுக்கு இது மன உளைச்சளை உண்டாக்கும். தமிழ்ப் பள்ளியில் போட்டதால்தானே இந்த நிலை ஆகவே அடுத்தடுத்த பிள்ளைகளை மலாய் பள்ளிக்கே அனுப்பலாம் என்ற மனப்பாங்கு இந்தியப் பெற்றோர்களுக்கு வரும். அதனால் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கையும் குறையும் . சில அம்னோ அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்புக்களுக்கு இது துணை போகும். இதற்கு இந்திய சமுதாயம் உடன்படுகிறதா ?
மலாய் மாணவர்கள் அவர்கள் மொழியிலேயே தோல்வி அடைந்தாலும் அவர்கள் புதுமுக வகுப்பிற்குப் போகத் தேவையில்லை. இது கல்வி அமைச்சின் கொள்கை. ஆனால் மற்ற பாடங்களில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தும் மலாய் மொழிப் பாடத்தில் மட்டும் தோல்வி கண்டால் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கட்டயம் புதுமுக வகுப்பிற்குச் செல்ல வேண்டும். இதுவும் கல்வி அமைச்சின் கொள்கைதான். இரு வேறு கொள்கைகளை கொண்டு பிரித்தாளும் இந்த அரசு , மலாய் மொழிப்பாடத்தின் தரத்தை உயர்த்தி அதில் மேலும் தமிழ் மாணவர்களை தோல்வி அடையச் செய்து தனது நீண்ட கால குறிக்கோளாகிய தமிழ் மற்று சீனப்பள்ளிகளை மூடும் திட்டத்திற்கு அடிகோல் நாட்டுகிறதோ என்று அஞ்சத் தோன்றுகிறது!
மலாய் ஆசிரியர்களை அனுப்பும் திட்டம் ஏன்?
இப்பொழுதுள்ள பாடத்திட்டதின் வழியே தமிழ் மற்றும் சீன ஆரம்பப்பள்ளி மாணவர்கள் யுபிஎஸ்ஆர் மலாய் மொழியில் அதிகமாக தேர்ச்சி பெற்று முதல் படிவம் செல்லமுடியும் என்பதனை கல்வி அமைச்சு விவேகமாக ஆராயவேண்டும்..
மலாய் மொழி எல்லாப் பள்ளிகளுக்கும் சமமாக ஆக்கப்பட்டால் அதன் விளைவாக மலாய் ஆசிரியர்கள் தமிழ் மற்றும் சீன பள்ளிகளுக்கு அனுப்பப்படும் சாத்தியக் கூறுகளும் அதிகமாக இருப்பதாக நம்பப்படுகிறது. மற்ற இன ஆசிரியர்கள் தமிழ், சீன பள்ளிகளுக்கு வருவது ஆரோக்கியமானதே என்றாலும் இதனால் நாளடைவில் மலாய் ஆசிரியர்களின் ஆதிக்கதிற்கு தமிழ் சீன பள்ளிகள் வந்துவிடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. இது தமிழ், சீன பள்ளிகளின் தனித்தன்மையயும் தோற்றத்தையும் பாதிக்க வல்லது.
மேலும், மலாய் இன ஆசிரியர்கள் தமிழ், சீன பள்ளிகளில் மலாய் மொழி போதிக்கும் பொழுது அவர்களுடைய ஈடுபாடும் அக்கறையும் உணர்வும் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்திய ஆசிரியர்கள் மலாய் மொழியை போதிக்கும் பொழுது அவர்களின் ஈடுபாடு , அக்கறை , இன உணர்வு உயர்ந்து இருப்பதாலும், இரு மொழி ஆளுமையும் இருப்பதால் மணவர்களுக்கு பாடம் கற்பித்தல் புரியும் வகையில் அமைகிறது என்றும் சொல்லப்படுகிறது. அதோடு பெரும்பாலான மலாய் மொழி ஆசிரியர்கள் தமிழ்ப்பள்ளிகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் நீடிப்பதில்லை என்ற தகவலும் நமக்கு கிடைத்துள்ளது.
ஒரே சீராக இருக்கும் தேசிய மொழியால்தான் இன ஒற்றுமைக மேலோங்கும் என்ற கூற்றும் ஏற்புடையதாக இல்லை. இன ஒற்றுமைக்கும் மொழியின் ஆளுமைக்கும் தொடர்பு உண்டு என்று எந்த ஆய்வும் கூறவில்லை. அதோடு மலாய் மொழி தமிழ், சீன மாணவர்களின் வழக்கு மொழி அல்ல. வீட்டிலும் சக நண்பர்களிடம் பேசும் போதும் அவர்களின் தாய்மொழியில்தான் பேசுவார்கள். இது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் மலாய் மாணவர்களுக்கு வழக்கு மொழி மலாய் மொழியாக இருப்பதால் அவர்களின் மொழி ஆளுமை மற்ற இன மாணவர்களை விட கூடுதலாகவே காணப்படும். பள்ளியில் மலாய் மொழித் தரத்தை உயர்த்தினால் மட்டும் மற்ற இன மாணவர்கள் மலாய் மாணவர்களுக்கு இணையாக பாண்டித்தியம் பெறுவார்கள் என்பது நிச்சயமில்லை.
மொழி ஒரு தொடர்புக் கருவி. எல்லா குடிமக்களும் தேசிய மொழியில் குறிப்பிட்ட அளவில் தேர்ச்சி பெற்றாலே போதும். மலாய் மொழியை எல்லா இனத்தவர்களும் தேசிய மொழியாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதற்காக எல்லா இனத்தவரும் சமமான தரத்தில் அதைப் பயில வேண்டும் என்பது மிகையான எதிர்ப்பார்ப்பு.
கமலநாதா?
இடை நிலைப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை மலாய் ஒன்றே போதனா மொழியாக இருப்பதால் எல்லா இன மாணவர்களும் சக மாணவர்களுடன் தொடர்பு கொள்ள போதுமானதாக உள்ளது. அப்படி இருக்கும் பொழுது தமிழ், சீனப்பள்ளி மாணவர்களின் மலாய் மொழி தரம் உயர்த்தப்பட்டால் அது இன ஒற்றுமையை மேலோங்கச் செய்யும் என்ற விவாதம் அர்த்தமற்றது.
நாட்டில் இன ஒற்றுமை மேலோங்க , சம உரிமை, சமமான வாய்ப்புகள், உயர்கல்விக்கூடங்களில் தேர்ச்சிகேற்ற வாய்பு, அரசாங்க வேலைகளில் இனப் பாகுபாடற்ற வாய்ப்பு, இவைதாம் தேவை. ஒற்றுமையை பரிணாம வளர்ச்சியின் வழிதான் வளர்க்க முடியுமே தவிர புரட்சியால் அல்ல என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.அதற்கு தேவை ஒரு நேர்மையான அரசு.
ம.சீ.ச தலைவர்களும் , சீன அரசு சாரா அமைப்புக்களும் இத்திட்டத்தை கடுமையாக எதிர்க்கும் வேளையில் , துணைக் கல்வி அமைச்சர் ப. கமலநாதன் மட்டும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்று நான் அறிகிறேன்..
தமிழ்ப் பள்ளிகளுக்குகு தமிழரே ஊறு விளைவிக்கக் கூடாது என்ற எண்ணத்தில், நான் அறிந்தது உண்மையில்லை என்று கமலநாதன் வெளிப்படையாக கூற வேண்டும் என்று நான் எதிர்பார்க்கின்றேன்.
உணர்வுள்ள மொழி பற்றுஉள்ள உங்கள்ளுக்கு வாழ்துகள்.
இதை நாம் எதிர்மறையாகப் (‘Negative’) பார்ப்பதை விட உடன்பாட்டு (‘Positive’) முறையில் பார்த்தோமானால் நன்மை நமக்கே என்று புரியும். இன்று ஆரம்ப பள்ளியில் தேசிய மொழியில் போதுமான பாண்டித்துவம் இல்லாமல் இடை நிலை பள்ளிக்கு போகும் நம் மாணவர்கள் பல வகைகளில் பாட போதித்தலை புரிந்துக் கொள்ள அவதிப் படுகின்றார்கள். இதனால் நம் மாணவர்களில் சிலர் இடைநிலைப் பள்ளியில் தகுந்த தேர்ச்சி பெறாமல் படிப்பில் பின் தங்கி விடுகின்றனர். இதற்கு இன்னொரு காரணம் நம் வீட்டில் தாய் மொழியாகிய தமிழில் உரையாடுவதாலும், இடைநிலைப் பள்ளியிலும் தமிழ் பயின்ற மாணவர்கள் பலர் தமிழிலியே உரையாடுவதாலும் பிற மொழி ஆளுமையை மேம்படுத்திக் கொள்ள இயலாமல் போகின்றது. பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் பொறுப்பேற்று இருந்த பொழுது இதை இடைநிலைப் பள்ளியில் மலாய் மொழியைப் போதிக்கும் ஓர் ஆசிரியை எம்மிடம் நேரிடையாகத் தெரிவித்த வார்த்தை “saya kasihan tengok dia orang tak fasih dalam bahasa melayu dan asyik bercakap di dalam bahasa tamil di kelas”. ஆகையால் மலாய் மொழி மேம்பாட்டை வரவேற்ப்போம் ஆனால் அது பிற பாடங்களையும், பிற மொழி பயிற்றுவதையும் பாதிக்காத வண்ணம் இருக்குமாறு பார்த்துக் கொள்வது நமது கடமையாகும். இந்த திட்டத்தின் அமூலாக்கத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். சோழியன் குடுமி சும்மா ஆடாது அப்பு.
இம்முறை கமலநாதன் …….வதற்கு வேறு ஆளை தேடவேண்டும் .
தமிழ் சீன பள்ளிகளில் மேலும் மலாய்க்கார ஆசிரியர்களை நிரப்ப வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இத்திட்டம் கொண்டு வரப் படுமானால் இது தடுக்கப் பட வேண்டியதாகும். மலாய் மொழி ஆசிரியர்களை வேலைக்கு அமர்த்த மலாய் பள்ளிகளில் இடமில்லை என்பதால் புதிய திட்டம் என்று இங்கு கொண்டு அவர்களை போடுவதானால் இது நமது பள்ளிகளுக்கு பெரும் தீங்கை விளைவிக்கும். தேவைக்கு அதிகமான மலாய் ஆசிரியர்களை இங்கு கொண்டு வந்து போட்டு விட்டு அவர்கள் போதிப்பதர்க்கு வகுப்பு இல்லையானால் இதர பாடங்களாகிய கலை (‘seni’), உடற்பயிற்சி (‘PJ’) பாடம் போன்றவற்றை போதிக்க இவர்களை பயன்படுத்துங்கள் என்று தலைமை ஆசிரியர்கள் நிர்பந்தப் படுத்தப்படுவார்கள். இது இன்னமும் பல மாவட்ட அதிகாரிகளின் வற்புறுத்தலின் பேரில் நடந்து வருகின்றது. இதனால் தமிழ் ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகள் கை நழுவிப் போகும். இப்பொழுதே இது ஆரம்பமாகி விட்டது. (தொடரும்)
கடந்த காலங்களில் UPSI -யில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 முதல் 3,000 பல்கலைக்கழக மாணவர்கள் வரை சேர்க்கப் பட்டு வந்த காலம் போய், இந்த ஆண்டு வெறும் 800 மாணவர்கள் அளவில் மட்டுமே எடுக்கப் பட்டதாக அறிகின்றோம். இதற்கு காரணம் பயிற்றுவித்த ஆசிரியர்கள் எண்ணிக்கை தேவைக்கு அதிகமாக இருப்பதாக கல்வி இலாக்க கொடுத்த கணக்கறிக்கை காட்டுவதால் குறைக்கப் பட்டது என்று விளக்கமளிக்கப் படுகின்றது. இதில் தமிழ் மொழி ஆசிரியர் தொழிலுக்கு பயிற்சி பெரும் மாணவர்களும் பெருவாரியாக பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வருடத்திற்கு 50 மாணவர்களை தேர்ந்தெடுத்த இடத்தில் இவ்வாண்டு ஏறக்குறைய 20 மாணவர்கள் மட்டுமே தமிழ் மொழி ஆசிரியர் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாக அறிகின்றோம். இதற்கு கல்வி இலாக்க காட்டிய காரணம் என்னவென்றால் இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் தேவைக்கு அதிகமாக இருக்கின்றார்கள் என்பதாகும். உண்மையில் நடந்தது என்னவென்றால் ஆரம்பத்தில் இடை நிலைப் பள்ளிகளில் தமிழ் மொழி போதிக்க வந்து பின்னர் அவர்கள் வேற்று படங்களை போதிக்க நியமித்தப் பிறகு இவர்களின் உண்மை நிலை கல்வி இலக்காவிர்க்குப் போய்ச் சேரவில்லை. கல்வி இலாக்காவின் கணக்கெடுப்பின் படி மேற்கூறியவாறு மாறிப்போனவர்கள் தமிழ் மொழி போதனா ஆசிரியர்களாகவே இன்னும் கணக்கில் வைக்கப் பட்டுள்ளனர். இப்பொழுது இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் போதிக்கும் ஆசிரியர்கள் எண்ணிக்கை மறு ஆய்வு செய்த பொழுது தமிழ் மொழி ஆசிரியர்கள் மேலும் தேவைப் படுவதாக தெரியவந்துள்ளது. தேவையான அளவிற்கு இடைநிலைப் பள்ளி தமிழ் மொழி ஆசிரியர்கள் பயிற்சிக்கு தேர்வாக வேண்டிய நமது மாணவர்கள் உண்மைக்குப் புறம்பாக இவ்வாண்டு குறைக்கப் பட்டுள்ளனர் என்ற குட்டு இப்பொழுது வெளிச்சமாகி இருக்கின்றது. நம் தமிழ் ஆசிரியர்களையும், தமிழ் மொழியில் பயிற்சி பெற விரும்பும் புதிய மாணவர்களையும் எல்லாம் வல்ல கமலநாதன் காப்பாற்றட்டும்!
CHINESE காரர்கள் அவர்கள் மொழியில் தான் படிக்கிறார்கள். JAPANESE காரர்கள் அவர்கள் மொழியில் தான் படிக்கிறார்கள். GERMAN காரர்கள் அவர்கள் மொழியில் தான் படிக்கிறார்கள். DUTCH காரர்கள் அவர்கள் மொழியில் தான் படிக்கிறார்கள். ENGLAND காரர்கள் ENGLISH மொழியில் தான் படிக்கிறார்கள். தமிழர்கள் தமிழ்மொழியில் தான் படிக்க வேண்டும். வேண்டும் என்றால் கூடுதல் வகுப்புக்கள் வைத்து, பாண்டிதுவதை வளர்க்கலாம், மற்ற மொழிகளுக்கு (மலாய் ஆங்கிலம் போன்று ). அதை விடுத்தது, அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று ஆரம்பித்தால், உருப்படாது. அதெல்லாம் சரி, கடந்த 10 வருடமாக ஆங்கிலத்தில் படி படி என்று அடித்து விட்டு, இப்பொழுது மலாய் மொழியில் கடி கடி , சாரி படி படி என்று அடித்தால், மாணவர்கள் என்ன மந்தையா ? நினைத்த நேரத்திற்கு நினைத்தபடி மொழிகளை மாற்றுவதால், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தான் சுமை. அரசியல் வாதிகளுக்கு அல்ல. நாம் தமிழர் கட்சி சீமான் அவர்கள் கூறியதை இங்கே அப்படியே பதிய வைக்கிறேன். தமிழனக்கு தமிழ் கட்டாயம். ஆங்கிலம் அவசியம். விருப்ப பட்ட மொழிகளை தேர்ந்தெடுத்து படித்து கொள்ளலாம். நாம் அனைவரும் மலேசியர்கள் என்பதால், மலாய் பாடம் கட்டாயம். ஆனால் அதற்க்கு தமிழை வழக்க நிலையில் இருந்து அகற்ற வேண்டிய அவசியமில்லை. இன்று இருக்கும் அரசியல்வாதிகளுக்கு, மலாய் மொழியில் கட்டாயம் 80% விழுக்காடு தேர்ச்சி அவசியம், ஒவ்வொரு முறை தேர்தலில் நிற்கும் பொழுது, என்று கொண்டு வந்தால், அப்பொழுது தெரியும் அது எவ்வளவு கடினம் என்று அவர்களுக்கு. காரணம் மனிதன் படித்ததை மறக்கும் சக்தி, கடவுள் நம்முள் வைத்துள்ளார். ஆகையால் மொழி மட்டுமே எல்லாம் ஆகிவிடாது. ALBERT EINSTEIN ஆங்கில மொழியில் தோல்வி கண்டார், ஆனால் வேதியியலில் அற்புதங்களை நிகழ்த்தினார். ஆகையால் மொழியை கொண்டு அளவிடுவதை வரவேற்க கூடாது.
கோம்பாக் வட்டாரத்திலுள்ள ஸ்ரீ செலாங் இடைநிலைப் பள்ளியில் போதித்த தமிழ் ஆசிரியருக்கு பதவி உயர்வு கொடுத்து மாவட்ட அலுவலகத்துக்கு மாற்றல்ழகி சென்றுள்ளார். சில வாரங்களுக்கு பிறகு வந்த தமிழ் மொழி ஆசிரியர் அண்மையில் உப்சி ஆசிரியர் பயிற்சி கல்லூரியிலிருந்து வந்தவராவார். வருத்தம் என்னவெனில், புதிதாக வந்த இளம் ஆசிரியைக்கு தமிழ் இலக்கியம் படித்துக்கொடுக்க பக்குவமில்லை என்றே அறிகிறது. இவ்வருடம் தமிழ் இலக்கியம் எடுக்கும் மானர்வர்களின் கதி??? கேட்டால், தமிழ் இலக்கியம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் பற்றாக் குறையாம்!! இந்தசூழ்நிலையில் சென்றுகொண்டிருந்தால், தமிழ் மொழியின் எதிர்காலம்??? கேப்பாரற்ற நிலையில் திண்டாடுகிறது தமிழ் மொழி வளர்ச்சி!!!
இந்நாட்டில் தமிழ் மொழியை அழிக்கவேண்டும் என்ற எண்ணத்திலேயே கண்ணுங் கருத்துமாய் இந்த அரசாங்கம் செயலில் முனைப்பு காட்டி வருகிறது.ம இ கா இந்த விசயத்தில் விட்டுக்கொடுத்தால் தமிழ் இனத்தையே இழிவு படுதியவர்களாய் தூற்றப்படுவீர்கள்.
அவனுங்க நாக்காளிக்கு அடிசுக்கிரணுங்க. இப்ப போய் சமுகம் சமுதாயம் மொழி எல்லா பேசப்படாது.
சிற்றெரும்பாக வந்து சுருக்கென கடித்தது வலிக்குது. ஆசிரியர் பயிற்சிக்கு நேர்முக பேட்டிக்கு வந்த ஒரு பெண்ணிடம் இலக்கித்தைப் பற்றி கேள்வி கேட்கலாம் என்று பேட்டியாளர் தேவாரம் பாடியது யார் என்று கேட்டாரம். அந்த பெண் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு தட்டு தடுமாறி சம்பந்தன் என்று சொன்னதாம். பேட்டியாளர் மேலும் சோதிக்க எண்ணி எந்த சம்பந்தன் என்று கேட்டாராம். அந்த பெண் சாமர்த்தியமாக துன் சம்பந்தன் என்று சொன்னாராம். இப்படிபட்டவருக்கு எப்படி ஆசிரியர் பயிற்ச்சி கல்லூரியில் இடம் கொடுப்பது என்று வெளியே வந்து புலம்பினாராம் பேட்டியாளர். ஆசிரியர் பயிற்ச்சிக்கு வின்னப்பம் சிவொர் தகுதி
விண்ணப்பம் செய்வோர் தகுதி இப்படி இருந்தால் எப்படி இருக்கும் பயிற்சி பெற்ற ஆசிரியர் தகுதி?
சற்றுப் பொறுங்க ஒய்.பி. குலா..! அவங்க நாற்காலி சண்டை இன்னும் முடியில…? இப்பா போய் உங்க கேள்வியை தொடுத்தால் எப்படி..?
தமிழ்ப் பள்ளிகளில் மலாய் மொழியின் தரத்தை மேம்படுத்த தேசிய பள்ளியின் மலாய் .மொழி பாட திட்டத்துக்கு ஈடாக கொண்டு வருவதில் தவறில்லை.நன்றாக கவனிதீர்களானால்,UPSR பரீட்சை தேர்வில் இப்பொழுது மலாய்,தமிழ்,சீனப் பள்ளிகளிலும் கொடுக்கப் படுகின்ற பரீட்சை தாள்களில் காணப்படும் உள்ளடக்கங்கள் ஏறக்குறைய சமமாகத்தான் உள்ளன.தேசியப் பள்ளிகளில் காணப்படும் மலாய் மொழி பாடத் திட்டங்களின் சாராம்சங்கல்தான் தமிழ் பள்ளிகளில் போதிக்கப்படும் மலாய் மொழிப் பாடத்திலும் காணப்படுகின்றன.நமது தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களும் அதனைப் போதிப்பதில் சளைத்தவர்களல்ல.நமது மாணவர்களும் அதனை எதிர்கொள்வதில் சிறந்த போட்டித் தன்மையும் கொண்டுள்ளனர்.2008 ஆம் ஆண்டில் தமிழ்ப் பள்ளியில் UPSR பரீட்சை எழுதிய என் மகனை மட்டும் நான் தேசியப் பள்ளியின் மலாய் மொழித் தேர்வை எழுத வைத்தேன்.அந்த மலாய் மொழியோடு மற்ற அனைத்துப் பாடங்களிலும் 7 A க்கள் பெற்றான்.ஆகவே இவ்விசயத்தில் நாம் அவசரப்படுவதில் அர்த்தமில்லை.ஆனால் இதனை காரணம் வைத்து தமிழ்ப் பள்ளிகளில் மலாய் மொழி போதிக்க மலாய்கார ஆசிரியர்களை அனுப்பி வைக்கும் குள்ளநரி செயலுக்கு நாம் அடிபணியக்கூடாது.முடிந்தால், அணைத்து தமிழ்ப் பள்ளிகளுக்கும் போதிய வசதியை செய்துகொடுதப் பிறகு அந்த திட்டதை அமுல்படுத்த நாம் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கலாம்.
யார் என்ன சொன்னாலும் நான் என் பதவி நாற்காலியை பாதுகாத்து வருவேன். மக்கள் எப்படி போனால் என்னக்கு என்ன.நான் என் குடும்பம் நல்ல இருந்தா சரி. இதுதான் கமல்நாடா, சூப்புராமணியம், ,சொரிவணன்,லோடுகுபலா ஆகியோர் நிலைமை.இந்த நாதெரிகள்தான் தமிழர்களின் உரிமைகளை நிலை நிறுத்த போகிறதோ?
வரவேற்ககூடிய ஒன்று….. நம் பிள்ளைகளின் மலாய்மொழி ஆற்றல் வளர வாய்ப்புண்டு… மலாய்மொழியின் பயன்பாடு தமிழ்ப்பள்ளியில் மிகவும் குறைவாக உள்ளது. இதனால், இடைநிலைப்பள்ளியில் சிரமத்தை எதிர்நோக்குவது நம் பிள்ளைகளே….
இது வரவேற்கக் கூடியது என்று சுந்தர் சொல்கிறார். சற்று ஆழ யோசித்தால் இது நன்மையை விட தீமைகளைத்தான் அதிகம் கொண்டுவரும்.
நன்மைகள் :
1. மலாய் மாணவர்களைப் போல் தமிழ் மாணவர்களின் மலாய் அடைவு நிலையும் ஒன்றாயிருக்கும்.
2. இடைநிலைபள்ளிகளில் நமது மாணவர்கள் மலாய் மொழியில் சிரமத்தை எதிர்நோக்க மாட்டார்கள்.
தீமைகள் :
1. மேற்சொன்ன 2 நன்மைகளும் நன்றாக படிக்கின்ற மாணவர்களே
பொருந்தும்.
2. அதிகமான தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மலாய் மொழியில் தோல்வி யுறுவர்.
3. புகுமுக வகுப்பு மாணவர் எண்ணிக்கை கூடும்
4. தமிழ்ப் பள்ளிகளின் மொத்த அடைவு நிலை சரியும்
5. மலாய் ஆசிரியர்கள் தமிழ்ப் பள்ளிகளுக்கு வர சாத்தியமுண்டு.
5. தமிழ்ப் பள்ளிகளின் தனித்தன்மை மாறும்.
6,மதில் மேல் பூனை எண்ணம் கொண்ட பல இந்தியப் பெற்றோர்கள் தேசியப் பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை மாற்றும் சாத்தியம் பெருகும்.
நடுநிலையான் கணிப்பு சரியானது.
தமிழ்ப் பள்ளியின் எதிர்காலத்தை காப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும். நாடு நிலையான் தெளிவாக சொன்னமைக்கு நன்றி!!!!
கமலநாதன் கை சப்பி ஓகே சொல்லிடுவான் இன்னொருவனோ அவனுக்கு கொமிசென் வாங்கி வாங்கி இதை அமல்படுத்த கொஞ்சம் கொமிசென் கொடுத்துட்டு நீங்கள் என்ன வேனுமளாம்னு செய்யுங்கன்னு சொல்றானான் இவனுங்க I MEAN mic காரனுங்க உதவாக்கரை ……வணுங்க