பினாங்கு மெர்டேகா கொண்டாட்டங்களைப் புறக்கணிக்க பள்ளிகளுக்கு உத்தரவு

schoolபினாங்கில்  உள்ள  பள்ளிகள் டிஏபி அரசாங்கம்  ஏற்பாடு  செய்துள்ள மெர்டேகா  கொண்டாட்டங்களில்  கலந்துகொள்ளக்கூடாது  என  மாநிலக்  கல்வி இயக்குனர்  ஒஸ்மான் ஹுசேன் பணித்துள்ளார்.

என்ன  காரணம்?

பினாங்கின்  கருப்பொருள்  கூட்டரசு  கருப்பொருளுடன்  முரண்படுகிறது. அதுதான்  காரணம்  என்றாரவர்.

பினாங்கு  அரசாங்கம்   இவ்வாண்டு  மெர்டேகா  கொண்டாட்டத்துக்காக  தேர்ந்தெடுத்துள்ள  கருப்பொருள்  ‘பெர்சே(தூய்மை’ என்பதாகும். ஆனால், கூட்டரசு  அரசாங்கத்தின்  கருப்பொருளோ ‘Malaysia, Sehati Sejiwa’ (ஒரே  உள்ளம், ஒரே  உணர்வு).

“ஆக ‘பெர்சே’  என்ற சொல்தான்  பிரச்னையாகும். கல்வி  அமைச்சின்  அனுமதிக்காகக்  காத்திருக்கிறோம். அமைச்சு அனுமதித்தால்  கொண்டாட்டங்களில்  கலந்துகொள்வோம்”, என  ஒஸ்மான்  கூறினார்.