சட்டத்துறைத் தலைவர் (ஏஜி)அலுவலகத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஜெஸ்ஸிகா கோர், நீதிமுறை மேலாய்வு கோரி மனு செய்வதுடன் அதிகாரிகள் தம்மைப் பணிநீக்கம் செய்யவும் தம் நிரந்தர வசிப்பிடத் தகுதி(பிஆர்)யை இரத்துச் செய்யவும் முனைப்பாக இருப்பதற்கான காரணத்தை விவரிக்கும் “அதிரடி” சத்திய பிரமாணமொன்றையும் தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது.
20 ஆண்டுகளுக்கு மேலாக ஜெஸ்ஸிகா மலேசியாவில் வசித்து வருகிறார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீதான குற்றப்பத்திரிகை கசியவிடப்பட்டதாகக் கூறப்படுவதன் தொடர்பில் அவர்மீதும் எம்ஏசிசி ஆலோசகர் ரஷ்பால் சிங் மீதும் விசாரணை நடைபெற்று முடிவில் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து ஜெஸ்ஸிகா நீதிமுறை மேலாய்வுக்குக் கோரிக்கை விடுப்பார்.
“அவர்கள் ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்பதை விவரிக்கும் அதிரடியான சத்திய பிரமாணம் ஒன்றையும் தாக்கல் செய்வார்”, என ஜெஸ்ஸிகாவுக்கு நெருக்கமான வட்டாரம் ஒன்று கூறியது.
நேற்றிரவு ஜெஸ்ஸிகா ஏஜி அலுவலகத்திலிருந்து திடீரென்று பணிநீக்கம் செய்யப்பட்டார் எனக் கூறப்படுகிறது.
“சத்திய பிரமாணம் என்றாலே “அந்தாந்துயாவும் C4-வும்” தான் ஞாபகத்திற்கு வருகிறது.
சொல்லாமல் செய்வதே நல்லது!! இந்நாட்டில், C4வைக் கொண்டு கொலை கூட செய்யத் தயங்கார்!!! ஏற்கனவே ஒரு சம்பவம் நடந்துள்ளது!!!!
நீதி தேவதை இன்றளவும் தூங்கி கொண்டிருக்கிறாள் – விழிப்பாளா என்று யாருக்கு தெரியும்?
குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான். இதுதான் அடுத்து நம்பிக்கை நாயகனுக்கு வரப் போகுது.