இணையத்தை முறைப்படுத்தும் அரசாங்க நடவடிக்கையை மக்கள் ஆதரிப்பர்

dahஒற்றுமை, பாதுகாப்பு,  பொருளாதார  நிலைத்தன்மை  ஆகியவற்றை  முன்னிட்டு இணையத்தை  முறைப்படுத்தும்  அரசாங்க  நடவடிக்கையை  மக்கள்  ஆதரிப்பார்கள்  என  பிஎன்  வியூகத்  தொடர்பு  இயக்குனர்  அப்துல்  ரஹ்மான்  டஹ்லான்  நம்புகிறார்.

அரசாங்கம்  இணையத்தை ஒழுங்குப்படுத்தவே  விரும்புகிறது. கட்டுப்படுத்த  எண்ணவில்லை  என்பதை  அப்துல்  ரஹ்மான்  வலியுறுத்தினார்.

“இதற்காக  எங்கள்  எதிர்காலத்தையே  பணயம்  வைக்க  தயார்.

“பாதுகாப்பின்  பொருட்டு  நாங்கள்  மேற்கொள்ளும்  நடவடிக்கையை  ஏற்றுக்கொள்கிறார்களா  என்பதை  மக்களே  இன்னும்  இரண்டு,  முன்றாண்டுகளில் (பொதுத்  தேர்தலின்போது)  முடிவு  செய்யட்டும்.

“இந்த  விசயத்தில்  மக்கள்  எங்கள்  பக்கம்தான்  என்று  நான்  நம்புகிறேன்”, என்றாரவர்.