பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிஸி ரம்லி, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.
நேற்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், பிஎன் மற்றும் எதிரணி எம்பிகள் சேர்ந்து நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலாமாக நஜிப்பை வெளியேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை அடுத்து ரபிஸி இவ்வாறு செய்தார்.
ஆனால், பிஎன்தான் தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை மகாதிர் வலியுறுத்தியிருந்தார்.
ரபிஸி, இன்று வெளியிட்ட அறிக்கையில் புதிய அரசாங்கத்தில் பிஎன் கட்சிகள் மட்டுமே இருப்பதை ஒப்புக்கொள்கிறாரா என்பது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. புதிய அரசாங்கம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் அவர் அறிக்கையில் விவரித்திருந்தார். அவரது நிபந்தனைகளாவன:
1)நாட்டில் ஜனநாயகத்தையும் முக்கிய அமைப்புகளையும் நிலைநிறுத்த இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைத்தல்,
2) தேர்தல் முறைகளைச் சீரமைத்து 14வது பொதுத் தேர்தல் சுயேச்சையாகவும் நியாயமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடப்பதற்கு வழிசெய்தல்,
3) பொருளாதாரம், சட்டம், ஊடகச் சுதந்திரம் ஆகியவற்றிலும் இரு தரப்பும் (பிஎன்னும் எதிரணியும்) ஒப்புக்கொள்ளும் இதர விவகாரங்களிலும் சீரமைப்புகளை மேற்கொள்ளல்.
இவை ரபிஸியின் நிபந்தனைகளாகும்.
பிகேஆர், டிஏபி, பாஸ் மூன்றும் 87 எம்பிகளை வைத்துள்ளன. அவர்களுடன் 25 எம்பிகள் சேர்ந்தால் நஜிப்பை வெளியேற்ற ஒரு எளிய பெரும்பான்மை கிடைத்து விடும்.
துன் சுடாஹ் tua
அடுத்த பொதுத் தேர்தல் வரும் வரை கூட்டு அரசாங்கத்தை அமைக்கலாம்!! அடுத்த பொதுத் தேர்தலில் 2/3 பெரும்பான்மை கிடைத்தால் குறிப்பிட்ட கட்சி அரசாங்கத்தை அமைக்கலாம், இல்லையெனில் கூட்டு அரசாங்கமே தொடர வேண்டும்!!!
மாமாக்கதிர் பேச்சு நம்பாதிர்கள்.பசு தோல் போர்த்திய பச்சோந்தி.