நன்கொடையாகக் கிடைத்தது 1மில்லியன்தான், ரிம2.6 பி. அல்ல: பெர்சே கிண்டல்

collectதேர்தல்  கண்காணிப்பு  அமைப்பான  பெர்சே,  நன்கொடைகள்   டி-சட்டை  விற்பனை  வழியாக  ஒரு  மில்லியன்  ரிங்கிட்டுக்குமேல்  திரட்டியுள்ளது.

இது  பற்றிக்  கருத்துரைத்த  அதன்  தலைவர்  மரியா  சின்  அப்துல்லா  நன்கொடை  இன்னும்  ரிம2.6 பில்லியனை  எட்டவில்லை  என்று  கிண்டலடித்தார்.

“பெர்சே-2க்கு சுமார் ரிம200,000  கிடைத்தது, பெர்சே-3க்கு  ரிம400,000-த்திலிருந்து  ரிம500,000வரை.

“இப்போது  ரிம1.4மில்லியன்.  ஆனால்,  இன்னும்  ரிம2.6பில்லியனை  எட்டவில்லை”, என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

கடந்த  பொதுத்  தேர்தலுக்கு  முன்னதாக  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  கணக்கில்  போடப்பட்டதாகக்  கூறப்படும்  ரிம2.6 பில்லியனைக்  கருத்தில்  கொண்டே  அவர்  அவ்வாறு  கூறினார்.