சுஹாகாம்: இப்போதெல்லாம் “சட்டவிரோதமான ஒன்றுகூடுதல்” என்ற ஒன்று இல்லை

 

Nownoillegalassemblyநடைபெறவிருக்கும் பெர்சே பேரணி பற்றி கூறப்பட்டு வரும் கருத்துகளைத் தொடர்ந்து மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) பொதுமக்கள் அமைதியாக ஒன்றுகூடுதலுக்கு தடைவிதிக்க முடியாது என்று இன்று வலியுறுத்தியது.

இந்நிலை போலீஸ் சட்டம் 1967, செக்சன் 27 அகற்றப்பட்டதிலிருந்து உருவாகியுள்ளது. இப்போது சட்டவிரோத ஒன்றுகூடுதல் என்று கருதப்பட்ட ஒன்று இல்லை என்று ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது.

இதன் அடிப்படையில், ஒரு பேரணி நடத்த ஏற்பாடு செய்பவர்கள் அப்பேரணியின் நோக்கங்கள் அமைதியானவை என்பதைத் தெரிவித்து அதனை அதிகாரத்தினருக்கு தெரிவித்து விட்டால், அப்பேரணி அமைதியானது என்று கருதப்பட வேண்டும் என்று சுஹாகாம் தலைவர் ஹஸ்மி அஹாம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 29-30களில் நடைபெறவிருக்கும் பெர்சே பேரணிக்கு போலீசார் தடை விதித்துள்ளது சரியானதே என்று புதிதாக துணை உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் நூர் ஜாச்லான் முகமட் கூறியிருந்ததைத் தொடர்ந்து சுஹாமின் இந்நினைவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Nownoillegalassembly1இதன் விளைவாக, அமைதியான ஒன்றுகூடுதல்களை பாதுகாக்கும் கடப்பாடு அதிகாரத்தினருக்கு இருப்பதோடு மட்டுமில்லாமல் அவற்றுக்கு உதவும் நடவடிக்களையும் எடுக்க வேண்டும். மேலும், அவர்கள் ஒன்றுகூடுதலுக்கான சுதந்திரம் குறித்த பல அனைத்துலக மக்கள் உரிமைகளின் படிநிலைகளுக்கு ஏற்றவாறு நடந்துகொள்ள வேண்டும், ஏனென்றால் இந்த உரிமைக்கு மலேசிய அரசமைப்புச் சட்டம், பிரிவு 10 பாதுகாப்பு அளித்துள்ளது    என்றார் சுஹாகாமின் தலைவர் ஹஸ்மி அஹாம்.

போலீசார் அமைதியான ஒன்றுகூடுதல் சட்டம் 2012 க்கு அப்பாற்சென்று ஓர் அமைதியான ஒன்றுகூடுதலை தடுக்க, முட்டுக்கட்டையிட அல்லது கட்டுப்படுத்தக் கூடாது என்று ஹஸ்மி வலியுறுத்தினார்.