ஸாகிட்: அம்னோ ஆட்சி தொடரவதற்காக அரேபியர்கள் ரிம2.6 பில்லியன் கொடுத்தனர்

Zahidarabspaidtokeepumno

பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்ட ரிம2.6 பில்லியனை நன்கொடையாக வழங்கிய அரேபிய குடும்பத்தின் தலைமை முதலீட்டு அதிகாரியை தாம் சந்தித்ததாக துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறிக்கொண்டார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சந்தித்ததாக கூறப்படுவதும் அதே குடும்பம்தான் என்று ஸாகிட் கூறினார்.

ஏன் மலாசியாவுக்கு யுஎஸ்$700 மில்லியன் நன்கொடை கொடுத்தீர்கள் என்று தாம் கேட்டதற்கு, தாங்கள் பணம் கொடுக்கும் நாடு மலேசியா மட்டுமல்ல. இன்னும் பல நட்பான முஸ்லிம் நாடுகள் இருக்கின்றன. அவற்றுக்கும் நன்கொடை கொடுக்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர் என்றார் ஸாகிட்.

“அவர்கள் அம்னோவும் பாரிசானும் தொடர்ந்து நாட்டை ஆள்வதை விரும்புகின்றனர்”, என்று ஶ்ரீ காடிங் அம்னோ தொகுதியின் ஆண்டுக் கூட்டத்தில் இன்று பேசுகையில் ஸாகிட் கூறினார்.

அம்னோவின் உதவித் தலைவரான ஸாகிட் நன்கொடை வழங்கியதாக அவர் கூறிக்கொண்ட அரேபிய குடும்பத்தின் பெயரை வெளியிடவில்லை.