ரிம2.6 பில்லியன் விவகாரத்தை மூடிமறைக்க பிரதமரின் ஏவலாளிகள் சமயத்தைப் பயன்படுத்துகின்றனர்

 

PMmenusereligiontocoverபிரதமர் நஜிப்பின் வங்கிக் கணக்கில் வைக்கப்பட்ட ரிம2.6 பில்லியன் விவகாரத்தை மூடிமறைப்பதற்காக அவரின் ஏவற்காரர்கள் இஸ்லாமிய சமயத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்று டிஎபியின் தேசிய அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக் பிரதமர் நஜிப்பை குறைகூறினார்.

ரிம2.6 பில்லியன் குறித்து நஜிப்பின் ஏவற்காரர்கள் பல்வேறான கருத்துகள் தெரிவித்து வருவதைத் தொடர்ந்து லோக் இதனைக் கூறினார்.

நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டிருக்கும் ரிம2.6 பில்லியன் விவகாரத்தில் நஜிப்பை பாதுகாப்பதற்காகவும் தற்காப்பதற்காகவும் அம்னோ தலைவர்கள் செயல்பட்டு வரும் முறை அவர்களது எல்லையற்ற மடத்தனத்தை வெளிப்படுத்துகிறது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனரா என்று தாம் அவர்களை கேட்க விரும்புவதாக அந்தோனி லோக் கூறினார்.

இன்று ஶ்ரீகாடிங் அம்னோ தொகுதி தலைவர் அப்துல் அசிஸ் கப்ராவி கூறிக்கொண்டதை குறிப்பிட்ட சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான லோக், ரிம2.6 பில்லியன் பெறப்பட்டதை நியாயப்படுத்த அம்னோ தலைவர்கள் இஸ்லாத்தை பயன்படுத்துவது குறித்து வெட்கமில்லாதவர்கள் இருப்பதாகத் தெரிகிறது என்றார்.

இரு தொகுதிகளில் போட்டியிட்ட டிஎபியை எதிர்க்க ரிம2.6 பில்லியனா?

டிஎபி யூதர்கள் மற்றும் இதர வழியில் நிதி பெற்றதாக கூறிக்கொள்ளப்படுவதைச் சாடிய லோக், 13ஆவது பொதுத் தேர்தலில் எடிபி இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளில் மட்டுமே அம்னோவுக்கு எதிராகப் போட்டியிட்டது (கெலாங் பாத்தா, ஜொகூர் மற்றும் செபங்கார், சாபா) என்பதைச் சுட்ட்க் காட்டி டிஎபியை இரு நாடாளுன்ற தொகுதிகளில் எதிர்க்க அம்னோவுக்கு ரிம2.6 பில்லியன் தேவைப்பட்டதா என்று அவர் வினவினார்.

இது உண்மையென்றால், 13 ஆவது பொதுத் தேர்தலில் அம்னோ இதனை அம்பலப்பட்டுத்தி இருக்கலாமே?

“நாடாளுமன்றத்தின் 222 இருக்கைகளில் டிஎபி போட்டியிட்ட 51 லிலும் அது வெற்றி பெற்றிருந்தாலும் கூட டிஎபி அதன் தனிப்பட்ட அரசை அமைப்பது சாத்தியமல்ல என்று லோக் தெளிவுபடுத்தினார்.