பொதுமக்கள் அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்கிறார்களே-பால் லவ் ஆதங்கம்

paulதாம்  பிரதமர்துறையில்  அமைச்சர்  பதவி ஏற்றதிலிருந்து  பொதுமக்கள்  தம்மிடம் அளவுக்கு  அதிகமாகவே  எதிர்பார்ப்பதாக பால்  லவ்  அங்கலாய்த்துக்  கொண்டார்.

தாம்  ஊழல்,  வெளிப்படைத்தன்மை,  மனித  உரிமை  விவகாரங்கள்  ஆகியவற்றுக்குப்  பொறுப்பேற்றதை  அடுத்து  வெளிப்படைத்தன்மை  காணப்பட  வேண்டும்,  ஊழல்  உடனடியாக  ஒழிக்கப்பட்டிருக்க   வேண்டும்  என்றெல்லாம்  பொதுமக்கள்  நிறையவே  எதிர்பார்த்தார்கள்  என்றாரவர்.

ஆனால்,  மக்களின்  எதிர்பார்ப்பைத்  தம்மால்  நிறைவேற்ற  முடியாமல்  போய்விட்டதை  சின்  சியு  டெய்லிக்கு  வழங்கிய  நேர்காணலில்  ட்ரேன்பேரன்சி  இண்டர்நேசனல்  மலேசியாவின்  முன்னாள்  தலைவரான  பால்  லவ்  ஒப்புக்கொண்டார்.

ஆழமாக  வேரோடியுள்ள  ஒரு  கலாச்சாரம்  என்பதால்  அதை  ஒழிப்பது  முடியாத  காரியம்போல்  தோன்றுகிறது.

சீரமைப்புக்கு  நீண்டகாலம் பிடிக்கும்  என்பதால்  தாம்  இன்னமும்  தம்  இலக்கை  அடையவில்லை  என்றாரவர்.  ஆனாலும்  அரசுத்  துறைகளில்  நிறைய  முன்னேற்றம்  காணப்பட்டிருக்கிறது  என்று  கூறிய  பால்  லவ்,  தம்  பணி  தொடரும்  என்றும்  சொன்னார்.