பிரதமர் : அம்னோ இல்லையென்றால் மலாய்க்காரர்கள் ‘இழிவுபடுத்தப்படுவார்கள்’

perlisஅம்னோ  ஆட்சியில்  இல்லை  என்றால்  மலாய்க்காரர்களும்  முஸ்லிம்களும்  இழிவுக்கு  ஆளாவார்கள்  என  அம்னோ  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார்.

“மலாய்க்காரர்கள்  தோற்றுப்  போவார்கள்,  மண்னைக்  கவ்வுவார்கள்  என்று  சிலர்  சொல்கிறார்கள். ஆனால் ‘இழிவுக்கு  ஆளாவார்கள்’  என்று நான்  கூற  விரும்புகிறேன்”. இன்று  பெர்லிஸ்,  கங்காரில்  பாடாங்  புசார்,  கங்கார்,  ஆராவ்  கிளைகளின்  அம்னோ பேராளர்  கூட்டத்தைத்  தொடக்கி  வைத்து  உரையாற்றியபோது  நஜிப்  இவ்வாறு  கூறினார்.

“அம்னோ  ஆட்சியை  இழந்தால்  மலாய்க்காரர்களும்  முஸ்லிம்களும்  எல்லாவற்றையும்  இழப்பர்”, என்றாரவர்.

கட்சியில்  உள்பிரச்னைகள்  இருக்குமானால்   அம்னோ  தலைவர்கள்  அவற்றுக்குத்  தீர்வு  காண  வேண்டும்  என்றும்  நஜிப்  கேட்டுக்கொண்டார்.

தம்மைக் குறை  சொல்கிறார்கள்  ஊழல்களுடன்  தொடர்புப்படுத்த முயல்கிறார்கள்  என்றாலும்,  கட்சியை  மேம்படுத்த  தொடர்ந்து  பாடுபடப்போவதாக  நஜிப்  கூறினார். மக்களின்  பணத்தைக்  கொள்ளையிட்டதில்லை,  சட்டத்தை  மீறியதில்லை  என்றாரவர்.

“கட்சியை  அழித்துவீட  மாட்டேன்  என்பது  உறுதி. காலஞ்சென்ற  என்  தந்தை  கட்டிக்காத்த  கட்சி  இது”.

மக்கள்  ஆதரிக்கும்வரை  பதவியில்  இருக்கப்போவதாக  பிரதமர்  கூறினார்.