நேற்றிரவு 8 மணிக்கு சரவாக்கில் கூச்சிங், ஸ்ரீஅமான் ஆகிய இடங்களில் காற்றின் தரம் உடல்நலனுக்குக் கேடு செய்யும் அளவுக்கு மோசமடைந்திருந்தது.
கூச்சிங்கில் காற்றின் தூய்மைக்கேட்டுக் குறியீடு(ஏபிஐ) 107ஆகவும் சமாராஹானிலும் ஸ்ரீஅமானிலும் 120 ஆகவும் பதிவானதாகச் சுற்றுச் சூழல் துறை அதன் அகப்பக்கத்தில் அறிவித்திருந்தது.
ஏபிஐ-இல் 0- 50வரை என்றால் காற்று தரமானது என்று பொருள். 51-100 மிதமானது, 101- 200 ஆரோக்கியத்துக்குக் கெடுதலானது 201-300 ஆரோக்கியத்துக்கு மிகவும் கெடுதல் செய்யக்கூடியது, 301க்குமேல் ஆபத்தானது.