பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவருக்குத் தவறான ஆலோசனைகளைக் கூறிவோரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்கிறார் விவசாயம் விவசாயம் சார்ந்த தொழில் துணை அமைச்சர் தாஜுடின் அப்துல் ரஹ்மான்.
“எனக்கு அவர்களில் இரண்டு மூன்று பேரைத் தெரியும். (தேர்தலில்) அம்னோவின் வெற்றி தோல்வி பற்றிக் கவலையே பட மாட்டார்கள்.
“பிரதமர் என்னை அழைத்தால் அவர்கள் யார் என்பதைத் தெரிவிப்பேன். பல தலைவர்கள் வீழ்ந்தது சுற்றி இருப்பவர்களால்தான்”, என்றவர் கூறியதாக சினார் ஹரியான் அறிவித்தது.
தாஜுடின் நேற்று சுங்கை புசார் அம்னோ தொகுதிக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
“நஜிப்பின் ஆலோசகர்கள் அவரைத் தொல்லையில் மாட்டிவிடக் கூடாது என தாஜுடின் கூறினார்.
“மக்களால் பலவற்றை ஏற்க முடியவில்லை. அவர் (நஜிப்) கவனமாக இருக்க வேண்டும். ஒன்று நல்லதில்லை என்றால் அதைச் செய்யக் கூடாது”, என்றார்.
மனத்துக்குப் பட்டதைப் பேசும் உரிமை தமக்குண்டு என்று கூறிய தாஜுடின், பிரதமருக்கு ஒன்று என்றால் அது அம்னோவையும் பாதிக்கும் என்றார்.
மனதில் பட்டதை நீங்கள் பேசலாம். நாங்கள் பேசினால் உள்ளே தள்ளி ‘பேசுவார்கள்’!