பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் 1999-இல் எந்தக் குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டாரோ அதே குற்றத்தை நஜிப்பும் செய்ய முனைகிறார் என டிஏபி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா ஒருவர் கூறினார்.
1எம்டிபி விவகாரத்தில் தாம் எந்தத் தவறும் செய்யவில்லை எனக் கூறுமாறு மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்துக்குப் பிரதமர் அழுத்தம் கொடுத்து வருவதைதான் புவா அவ்வாறு குறிப்பிட்டார்.
“நஜிப் அப்துல் ரசாக்கோ மற்ற அமைச்சர்களோ பிரதமருக்குச் சம்பந்தமில்லை என்று கூறும்படி எம்ஏசிசி-க்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவார்களேயானால் 1999-இல் அன்வார் இப்ராகிம் என்ன குற்றம் புரிந்தார் என்று கூறப்பட்டதோ இவர்களும் அதே குற்றத்தைப் புரிந்தவர்கள் ஆவர்.
“1999-இல் அன்வார் இப்ராகிம் அவரது பாலியல் குற்றங்களை விசாரணை செய்த சிறப்புப் பிரிவு அதிகாரிகள்மீது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை வளைத்துப்போட முனைந்ததற்காக ஆறாண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.
“அன்வார்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் இட்டுக்கட்டப்பட்டவை என்றே மலேசியர்கள் நம்பினார்கள். ஆனால் நஜிப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தெள்ளத் தெளிவானவை. அவர் எம்ஏசிசி சார்பில் தொடர்ந்து தவறான அறிக்கைகளை வெளியிட்டு வருவதே இதற்குச் சான்றாகும்”, என்றார்.
ரிம2.6 பில்லியன் அவரது சொந்தக் கணக்கில் போடப்பட்டதில் எந்தத் தவறும் நிகழவில்லை என்று பிரதமர் திரும்பத் திரும்பக் கூறிவருவது பற்றிக் கருத்துரைத்தபோது புவா இவ்வாறு கூறினார்.
அப்படி என்றால் நசிப்பும் அன்வார் மாதிரி சுருட்டு அடிக்கிறாரா ?? ( சுருட்டு தவறாக எழுதிவிட்டேன் ,அது வெறும் மூன்று எழுத்துதான் !)