பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வெளியேற்றப்படாமல் தொடர்ந்து பதவியில் இருந்தால் அதுதான் மலாய்க்கார்களுக்கு “இழிவு” என்கிறார் பத்து கவான் அம்னோ முன்னாள் உதவித் தலைவர் கைருடின் அபு ஹசான்.
“நஜிப் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதுதான் மலாய்க்காரர்களுக்கு இழிவு. நஜிப்பை வெளியேற்றாவிட்டால் மலாய்க்காரர்கள் பிளவுபடுவார்கள், இழிவுக்கு ஆளாவார்கள்.
“நஜிப் தங்குதடையின்றி விருப்பம்போல் நடந்துகொண்டு, பகல் கனவுகளில் திளைத்திருக்கும்வரை அம்னோவிலும் பிஎன்-னிலும் நிலைத்தன்மை இருக்காது”, என கைருடின் முகநூலில் பதிவிட்டிருந்தார்.
அம்னோ ஆட்சி அதிகாரத்தை இழந்தால் மலாய்க்காரர்கள் இழிவுக்கு ஆளாவார்கள் என்று நஜிப் கூறியதற்கு கைருடின் இவ்வாறு எதிர்வினை ஆற்றியுள்ளார்.
நஜிப் பதவி விலகினால் அம்னோவும் பிஎன்னும் வலுவடையும் என்றவர் நம்புகிறார்.
“நஜிப் இல்லையென்றா;ல் மலாய்க்காரர்களும் மற்ற இனத்தவரும் ஒன்றுபடுவர்.
“மக்களுக்கு நஜிப் மீதிருந்த நம்பிக்கை போய்விட்டது. அவர்கள் நஜிப்பின் தலைமையையோ ஆளுமையையோ நம்பத் தயாராக இல்லை.
“மக்களை ஏமாற்ற அவர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் ஆனால், மக்களாகிய நாம் ஏமாற மாட்டோம்”, என்றார்.
நீங்கள் சொல்வது அவர் காதில் விளங்காது !!!!!!!!
இது மலாய்க்காரர்களுக்குப் புரியுது ஆனால் பிரதமருக்குப் புரியலையே!. பணமும் பதவி மோகமும் கண்ணை மறைக்குது.
நஜிப்பால் மலேசிய மக்கள் அனைவருக்குமே இழிவு தான்!
பின்னால் பலப்பேர் இப்படிதான் பேசுகிறார்கள் நேராகப் பேச யாருக்கும் தைரியம் உண்டோ?
அம்னோவையும் மலாய்க்காரர்கள்என்ற இன துவேசத்தையும் தமக்கு ஆயுதமாக பயன் படுத்தி ஆட்சியில் நிலைத்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் போராடிக் கொண்டிருக்கிறார். கரணம் மீறினால் மரணம் என்று அவருக்கு நன்றாகவே தெரியும்!!!! அம்னோ தலைவர்களோ, நஜிப் வீழ்ந்தால், அவருடன் சேர்ந்து எல்லோருமே வீழ்வோம் என்றறிந்து, குசு விட்டாலும் வாசமே என்று நஜிப்புடன் மாரடிந்துக் கொண்டிருக்கின்றனர்!!!!