அன்வார் குடும்பத்தில் பில்லியன் கணக்கில் பணம் என்று கூறியவருக்கு வழக்குரைஞர் கடிதம்

familyஅன்வார்   இப்ராகிமின்  குடும்பத்தார்  கணக்கில்  பில்லியன்  கணக்கில்  பணம்  குவிந்து  கிடப்பதாகக்  கூறிய  அம்னோ  தொகுதித்  தலைவருக்கு  வழக்குரைஞர்  கடிதம்  அனுப்பப்பட்டது.

அவ்வாறு  கூறியதற்காக  கெப்போங்  அம்னோ  தலைவர்  ரிஸுவான்  அப்ட்  ஹமிட்  மன்னிப்பு  கேட்க  வேண்டும்  என  அன்வாரின்  மனைவியும்  பிகேஆர்  தலைவருமான  டாக்டர்  வான்  அசிசா வான்  இஸ்மாயில்,  அவர்களின்  பிள்ளைகளான  நூருல்  இஸ்ஸா,  நூருல்  நுஹா,  முகம்மட்  இஹ்சான்  ஆகியோர்  கோரிக்கை  விடுத்துள்ளனர்.

பிகேஆர்  சட்டப்  பிரிவுத்  தலைவர்  லத்திபா  கோயா,  வழக்குரைஞர்  நிறுவனமான  டாயிம் & கமானி  சார்பாக  அந்தக்  கடிதத்தை  அனுப்பி  இருந்தார்.

ரிஸுவானுக்கு  48 மணி  நேரம்  அவகாசம்  வழங்கப்பட்டது.  அதற்குள்  அவர்  கோரிக்கையை  நிறைவேற்றாவிட்டால்  அவர்மீது  சட்ட நடவடிக்கை  மேற்கொள்ளப்படும்.