நாட்டின் நிலைத்தன்மை சீர்குலைந்து வருவதையும் ரிங்கிட்டின் மதிப்பு சரிவடைந்துவருவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார். ஆட்சியாளர்கள் அரசாங்கத்திடம் இப்படிக் கோரிக்கை வைப்பது வழக்கத்தில் இல்லாத ஒன்று.
ஆட்சியாளரான தாம் அரசியலில் தலையிடக் கூடாத என்பதை சுல்தான் ஒப்புக்கொண்டார். ஆனாலும் மக்களின் கவலையை எடுத்துரைப்பது தமது கடமை என்று கருதுவதாக அவர் சொன்னார்.
“ஆட்சியாளர் என்ற முறையில் நான் அரசியலில் சம்பந்தப்படக்கூடாது. ஆனாலும், அரசன் என்ற முறையில் என் மாநில மக்கள் நல்ல, முற்போக்கான, வளப்பமான சூழலில் வாழ்வதை உறுதிப்படுத்துவது என் கடமையாகும்.
“எனவே, அரசாங்கம், ரிங்கிட்டின் வீழ்ச்சி உள்பட, நாம் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறேன்”. சுல்தான் இப்ராகிம், Johor Southern Tigers முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த உரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
நாட்டு நடப்பு எந்த அளவுக்கு மோசம் அடைந்திருந்தால் மாநில சமஸ்தானதிபதிகள் நேரிடையாக நடுவண் அரசைக் குறை கூறுவர். இது இந்நாட்டில் புதியதொரு சகாப்தத்தை ஏற்படுத்தி உள்ளது. சமஸ்தானதிபதிகள் நேரிடையாக அரசியலில் குதிக்கின்றார்கள். இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை.
நாம் சொல்லுவது காதில் விழாது. மாநில சுல்தான் சொன்னால் கொஞ்சம் காதில் விழும் என எதிர்பார்க்கலாம்!
நல்ல அறிவுரை.நாணய மதிப்பு படு வீழ்ச்சி.நாணய மதிப்பை உயர்த்த வழி காண்பது முக்கியமான ஒன்று.
விரைவில் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு காண்பீர் என நம்புகின்றோம்