வழக்குரைஞர் மன்றம், விசாரணைகளில் நிகழ்ந்துள்ள குறுக்கீடுகள் பற்றி விவாதிப்பதற்காக அவசரக் கூட்டமொன்றை நடத்த முடிவு செய்துள்ளது. அதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சொந்தக் கணக்கில் போடப்பட்டதாகக் கூறப்படும் ரிம2.6 பில்லியன் பற்றியும் விவாதிக்கப்படும்.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஒரு சிறப்புக் கூட்டத்தில் அவசரக் கூட்டம்(இஜிஎம்) நடத்துவது பற்றி முடிவு செய்யப்பட்டது.
வழக்குரைஞர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இஜிஎம் செப்டம்பர் 12-இல் நடக்கும் என வழக்குரைஞர் மன்றம் கூறியது. இடமும் கூட்ட நிகழ்ச்சி நிரலும் பின்னர் ஒரு நாளில் அறிவிக்கப்படும்.
“இஜிஎம், எஸ்ஆர்சி இண்டர்நேசனல் சென். பெர்ஹாட்டிலிருந்து பணம் மாற்றி விடப்பட்டது மற்றும் பிரதமரின் சொந்த வங்கிக் கணக்கில் ரிம2.6 பில்லியன் மாற்றிவிடப்பட்ட விவகாரம் ஆகியவை மீதான விசாரணைகளில் குறுக்கீடுகள் நிகழ்ந்ததாகக் கூறப்படுவதை விவாதிக்கும்….
“அத்துடன் சட்ட ஆளுமையை நிலைநிறுத்தவும் நீதி பிறழ்ந்து விடாமல் தடுக்கவும் வழக்குரைஞர் மன்றம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளும் அதில் விவாதிக்கப்படும்”, என அச்சுற்றறிக்கை தெரிவித்தது.
மலாய் வழக்கறிஞர் மன்றம் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்குமா? எதிர் அறிக்கை வருமே!
விசாரணையில் உள்ள எந்த விவகாரத்தையும் வழக்குரைஞர் மன்றம் விசாரிக்கக்கூடாது என்று நீதிமன்றத்தில் முறையீடு செய்து தடை உத்தரவு பிறப்பிக்க பல கோணங்களில் சிந்தனைகள் ஓடுமே????
ஆமாம், ஆமாம் அதற்குத்தானே சில வழக்குரைஞர்களை அமீனோ வாடகைக்கு அமர்த்தி வைத்துள்ளது. இவனுங்களும் வழக்குரைஞர் என்ற போர்வைக்குள் செம்மறி ஆட்டுக் கூட்டத்தில் ஒரு கருப்பாடாக வளமாக வாழ்கின்றனர். அப்புறம் ஏன் தடை உத்தரவு வாங்க முடியாது?. பணமிருந்தால் எல்லாமே வாங்கலாம் என்பது நம்பிக்கை நாயகனின் தாரக மந்திரமாகி விட்டது.