பகாங் எம்பியும் எக்ஸ்கோவும் சொத்து விவரத்தை அறிவிப்பர்

pahangபகாங்  மந்திரி  புசாரும்  அம்மாநில  ஆட்சிக்குழு  உறுப்பினர் 11  பேரும்,  விரைவில்  தங்கள்  சொத்து  விவரங்களை  அறிவிப்பார்கள்.   ஊழல்  எதிர்ப்புத்  திட்டத்தின்  ஒரு  பகுதியாக அவர்கள்  இவ்வாறு  செய்கிறார்கள்.

விரைவில்  சொத்து  விவரங்களை  அறிவிக்கப்  போவதாக  மந்திரி  புசார்  அட்னான்  யாக்கூப்  தெரிவித்தார்  என இன்றைய  பெரித்தா  ஹரியான்  கூறிற்று.

பினாங்கு,  சிலாங்கூர்  அரசாங்கங்கள்  ஏற்கனவே அவற்றின்  முதலமைச்சர்,  மந்திரி  புசார்  மற்றும்  ஆட்சிக்  குழு  உறுப்பினர்கள்  ஆகியோரின்  சொத்து விவரங்களை  அறிவித்துள்ளன.