போலீசாரின் இரட்டை நியாயம்: கெராக்கான் இளைஞர் பகுதி சாடல்

yongநேற்றிரவு  நாடாளுமன்றத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம்  செய்த மாணவர்கள் கைது  செய்யப்பட்டார்கள்.  அதேவேளை  பெர்சே-எதிர்ப்பு  ஆர்ப்பாட்டத்தில்  கலந்துகொண்டவர்கள்  கைது  செய்யப்படவில்லை. ஏன்  இந்த இரட்டை  நியாயம்    என  கெராக்கான் இளைஞர்  துணைத்  தலைவர்  எண்டி  யோங்  கேள்வி  எழுப்பியுள்ளார்.

மாணவர்கள்  அமைதியான  முறையில்  எதிர்ப்பைத்  தெரிவிக்கவே  நாடாளுமன்றத்துக்குமுன்  கூடினார்கள்  என  ஒரு வழக்குரைஞருமான  யோங்  கூறினார்.

பிரதமர் நஜிப்  அப்துல் ரசாக்   பதவி  விலகக்  கோரிக்கை  விடுத்த  அவர்களைக்  கலந்து  செல்லுமாறு  போலீஸ்  கூறினார்கள். அவர்கள்  மறுக்கவே  கைது  செய்யப்பட்டனர்.

“கடந்த  வார  இறுதியில்  பெர்சே-எதிர்ப்புக்  குழுவொன்று  வன்செயலில்  ஈடுபடப்போவதாக  வெளிப்படையாகவே  மிரட்டியது. குற்றவியல்  சட்டத்தின்படி  அவர்களைக்  கைது  செய்திருக்க  வேண்டும்.  சோகோ  முன்புறம்  ஒன்றுதிரண்ட  அவர்கள் இல்லாத குரங்குச்  சேட்டைகளையெல்லாம்  செய்தார்கள்.  ஏன்  இந்த  இரட்டை  நியாயம்?”, என்றவர்  வினவினார்.

அதிகாரிகள்  நியாயமாக  நடந்துகொள்ள  வேண்டும்  என்று  யோங்  விருப்பம்  தெரிவித்தார்.