ரஹ்மான்: பெர்சே 4ஆல் பொருளாதாரம் பாதிக்கப்படும்

dahlanபெர்சே 4 பேரணியை ஒத்திவைக்க  வேண்டும்  என  நகர்ப்புற  நல்வாழ்வு,  வீடமைப்பு,  ஊராட்சி  அமைச்சர் அப்துல்  ரஹ்மான்  டஹ்லான்  வலியுறுத்தினார். பேரணி  நடத்தினால்  பொருளாதாரம்தான்  மோசமாக  பாதிக்கப்படும்  என்றவர்  எச்சரித்தார்.

“பெர்சே  நடத்தப்படும்  நேரம்  சரியல்ல. மலேசியர்களுக்கு  பில்லியன்  கணக்கில்  பண இழப்பும்  வேலை  இழப்பும்  ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத் தீயை  மேலும்  கிளறிவிட  வேண்டாம். பொறுப்பாக  நடந்துகொண்டு  தள்ளி  வையுங்கள்.

“பெர்சே  விவேகமாக  நடந்துகொள்ள  வேண்டும். உலகப்  பொருளாதாரம் வீழ்ச்சி  அடைந்துவருவதால்  இது அமைதி  காக்கப்பட  வேண்டிய  நேரம். சில  வாரங்களுக்காவது அமைதியாக  இருப்பது  நல்லது”, என்று  ரஹ்மான்  டிவிட்டரில்  பதிவிட்டிருந்தார்.

பொருளாதாரம்  மோசமானால்  சாதாரண  மலேசியர்கள்தான் பாதிக்கப்படுவார்கள்  என்றாரவர்.