ஊழல்-எதிர்ப்பு மாநாட்டைப் பிரதமர் தொடக்கிவைக்க மாட்டார்

conferபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  அடுத்த  வாரம்  கோலாலும்பூரில்  நடைபெறும்  அனைத்துலக  ஊழல்- எதிர்ப்பு  மாநாட்டைத்  தொடக்கிவைக்கப்  போவதில்லை.

இதனை  அம்மாநாட்டுக்கு  ஏற்பாடு  செய்துள்ள  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம் (எம்ஏசிசி)  உறுதிப்படுத்தியது.

பிரதமர்துறை  அமைச்சர்  பால்  லவ்தான்  மாநாட்டைத் தொடக்கி  வைப்பார்  என  எம்ஏசிசி  துணைத்  தலைமை  ஆணையர் முஸ்டபார்  அலி  தெரிவித்தார்.

“பிரதமர்துறை  அமைச்சர்  அப்துல்  வாஹிட்  ஒமார்  மாநாட்டை  முடித்து   வைப்பார்”, என்றாரவர்.

சரி, பிரதமர் ஏன்  தொடக்கிவைக்கவில்லை? இக் கேள்விக்கு  முஸ்டபா  பதிலளிக்க  மறுத்து  விட்டார்.

சுமார்  130  நாடுகளின்  பேராளர்கள்  மாநாட்டில்  கலந்துகொள்கிறார்கள்.