அவசரகாலம் பிரகடனப்படுத்தப்பட்டால் பெர்சே 4-இல் இராணுவம் தலையிடும்

atmஅரசாங்கம் அவசரகால  நிலையைப்  பிரகடனப்படுத்தினால்  வாரக்  கடைசியில்  நடைபெறத்  திட்டமிடப்பட்டுள்ள  பெர்சே  பேரணியில்  இராணுவம்  தலையிடும்  என்று  ஆயுதப்படைத்  தலைவர்  சுல்கிப்ளி  முகம்மட்  ஸின்  கூறினார்.

“அவசரகால  நிலை  அறிவிக்கப்பட்டால்  மட்டுமே  ஆயுதப்படை  தலையிடும்.

“பொது  ஒழுங்குக்கு  மிரட்டல் என்ற  நிலைமையில்தான்  நிலைமையைக்  கட்டுப்படுத்த நாங்கள்  போலீசின்  பணியை  மேற்கொள்வோம்”, என்றவர்   ஸ்டார்  ஆன்லைனிடம்  தெரிவித்தார்.

இப்போதைக்கு  ஆகஸ்ட் 29, 30 ஆம்  நாள்களில்  நடத்துவதற்குத்  திட்டமிடப்பட்டுள்ள  பேரணியின்போது  நிலைமைக்  கண்காணிக்க  இராணுவம்  நிறுத்தி வைக்கப்படமாட்டாது  என்று  கூறிய  சுல்கிப்ளி  பேரணியைக்  கட்டுப்படுத்தும்   பயிற்சியெல்லாம்  இராணுவத்துக்கு  அளிக்கப்பட்டிருக்கிறது  என்றார்.