பெர்சே 4 பேரணியை ஊக்குவிக்கும் இணையத்தளங்கள் முடக்கப்படும்

rallyberபெர்சே 4  பேரணியை  பிரபலப்படுத்தியும்  அது  பற்றிய  செய்திகளை  வெளியிட்டும்  அதில் சேருமாறு  மக்களை  ஊக்குவித்தும் வரும்  இணையத்தளங்களை  மலேசிய தொடர்பு  பல்லூடக  ஆணையம் (எம்சிஎம்சி)  முடக்கும்.

அந்த  இணையத்தளங்களால்  நாட்டின்  நிலைத்தன்மைக்கு  மிரட்டல்  ஏற்படலாம்  என்று கூறும் உள்துறை  அமைச்சின்  அறிக்கை  ஒன்றை  ஆணையம்  சுட்டிக்காட்டியது.

“எனவே  இந்த  இணையத்தளங்களில்  வரும்  செய்திகளைச்  சமூக வலைத்தளங்களில்  பகிர்ந்து கொள்வதில்  பொதுமக்கள்  கவனமாக  இருக்க  வேண்டும்  என்று எம்சிஎம்சி  நினைவுறுத்த  விரும்புகிறது”, என  அந்த  ஆணையத்தின்  அறிக்கை  ஒன்று  கூறியது.

உள்துறை  அமைச்சு  வாரக்  கடைசியில்  நடைபெறவுள்ள பெர்சே 4 பேரணி   சட்டவிரோதமானது  என  உள்துறை  அமைச்சு  கூறியுள்ளது. அது  அரசாங்கத்துக்கு  எதிராக  மக்களைத்  தூண்டிவிடும்  நோக்கத்தைக்  கொண்டிருக்கிறதாம்.