போலீஸ் சிறப்புப் பிரிவு முன்னாள் துணை இயக்குனர் அப்துல் ஹமிட் படோர், அப்பிரிவிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டது பற்றிச் செய்தியாளர்களிடம் பேசியதற்காக என்ன தண்டனை கொடுக்கப்பட்டாலும் ஏற்கத் தயாராக உள்ளார்..
“கொஞ்சம்கூட அஞ்சவில்லை.
“எந்தத் தண்டனை என்றாலும் ஏற்கத் தயார். நான் ஒரு போலீஸ் அதிகாரி. அதற்குரிய கண்ணியத்துடன் நடந்து கொள்வேன்”, என அப்துல் ஹமிட் தெரிவித்தார். அவருக்கு விளக்கம் கேட்டு அனுப்பப்பட்டுள்ள கடிதம் பற்றி வினவியதற்கு அப்துல் ஹமிட் மலேசியாகினியிடம் இவ்வாறு தெரிவித்தார்.
போலீஸ் படையிலிருந்து பணிஇடமாற்றம் செய்யப்பட்டது பற்றிச் செய்தியாளர்களிடம் பேசியது ஏன் என்று அப்துல் ஹமிட் விளக்கமளிக்க வேண்டும் என்று போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் நேற்று கூறியிருந்தார்.
போலீஸ் படையினருக்கான கட்டுப்பாட்டு விதிகளை மீறிச் செய்தியாளர்களிடம் பேசிய அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் காலிட் கூறினார்.
இப்போது விடுப்பில் உள்ள அப்துல் ஹமிட் விளக்கம்- கேட்கும் கடிதம் கிடைத்ததும் “அதற்குப் பதில் அளிக்கப்படும்” என்றார்.
அப்துல் ஹமிட், பிரதமர்துறைக்கு திடீர் மாற்றம் செய்யப்பட்டதும் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் கூட்டமொன்றைக் கூட்டினார்.
அக்கூட்டத்தில் அவர், திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டதற்கான காரணத்தை விவரித்தார். 1எம்டிபி மீதான புலனாய்வில் முழுக்க முழுக்க வெளிப்படைத்தன்மை தேவை என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால்தான் போலீஸ் படையிலிருந்து தூக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அரசனானாலும் ஆண்டியானாலும் குற்றம்குற்றமே ..
ஒவ்வொரு அரச அதிகாரியும் தங்களைபோன்று நேர்மையாக உழைத்தால் (ஆமாம்சாமி ) அரசியல்வாதிகள் உழல் செய்யதயங்குவார்கள் ..
கவலைபடாதீர்கள் நேர்மையானவர்கள் வரலாம் உங்கள் பதவியும் கிடைக்கலாம் இறைவனின் கருணையால் …
யாமிருக்க பயமேன் என்று சொல்ல இவர் பின்னர் இருப்பது யாரோ?