ரிம2.6 பில்லியனில் பெரும்பகுதியைத் திரும்பப் பெற வேண்டும்: நஜிப் மீது ‘அம்னோ’ வழக்கு

sueஅம்னோவைப்  பிரதிநிதிப்பதாகக்  கூறிக்கொள்ளும்  கட்சி  உறுப்பினர்  ஒருவர், கட்சித்  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  எதிராக வழக்கு  தொடுத்துள்ளார்.  அதில்  அவர்,  கட்சிக்குக்  கொடையாக  வழங்கப்பட்ட ரிம2.6 பில்லியனில்  வெளிநாட்டுக்குச்  சென்றுவிட்டதாகக்  கூறப்படும்  பணத்தில்  பெரும்பகுதியை  மீட்டெடுக்க  வேண்டும்  என்று  கோரிக்கை  விடுத்துள்ளார்.

நஜிப்பின் தனிப்பட்ட  வங்கிக்  கணக்கில்  சேர்க்கப்பட்ட பணத்தில்  பெரும்பகுதி  ஈராண்டுகளுக்குமுன்  சிங்கப்பூருக்கு  மாற்றி விடப்பட்டதாம்.

அந்த  அம்னோ  உறுப்பினர்,  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றத்தில் பதிவு  செய்த  மனுவில்  நஜிப்பையும்  அம்னோ  நிர்வாக  செயலாளர்  அப்துல்  ரவுப்  யூசுப்-பையும்  எதிர்வாதிகளாகக்  குறிப்பிட்டிருக்கிறார்.

கட்சிக்காகவும்  அதன்  உறுப்பினர்களுக்காகவும்   இந்த வழக்கைத்  தொடுப்பதாக  அவர்  கூறிக்கொண்டார்.