பெர்சே நஜிப்புக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு வலு சேர்க்கும்

econபிஎன்  எம்பிகளும்  எதிரணி  எம்பிகளும்  சேர்ந்து  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  எதிராக  நம்பிக்கையில்லா  வாக்கெடுப்பு  கொண்டுவரும்  திட்டம்  இப்போதைக்கு  வேண்டுமானால்  சாத்தியமற்ற  ஒன்றாக  தோன்றலாம்.  ஆனால்,  வாரக்  கடைசி   பெர்சே 4  பேரணிக்குப்  பிறகு  நிலமை  மாறலாம் என்கிறது  எக்கோனமிஸ்ட்  சஞ்சிகை.

நஜிப்பை  வெளியேற்றும்  மற்ற  வழிகள்  எல்லாம்  அடைக்கப்பட்டு  விட்டன. எஞ்சியுள்ள ஒரே  வழி  நம்பிக்கையில்லா  வாக்கெடுப்பு  கொண்டு  வருவதுதான். நம்பிக்கையில்லா  வாக்கெடுப்பு  நடத்தி  நஜிப்புக்குப்  பதிலாக இரு-கட்சி சார்ந்த அரசாங்கமொன்றை  அமைக்க  வேண்டும்.

“அதில்  பிரதமராகும்  தகுதி  பெற்ற  ஒருவர் தெங்கு  ரசாலி  ஹம்சா. வணிகர்களிடையே நல்ல  வரவேற்பைப்  பெற்றுள்ள  மூத்த  அரசதந்திரி.

“இப்படி ஒரு  திட்டம்  சாத்தியமற்றது போலத்தான்  தோன்றுகிறது. ஆனால், ஆகஸ்ட்  29-இல் பல்லாயிரக்கணக்கான  மலேசியர்கள்  தெருவில்  இறங்கினால்  இது  வலு பெறலாம்”, என்று  அது  கூறிற்று.