அஸ்மின்: ஆண்டு இறுதி வாக்கில் நாட்டின் தலைமை மாறலாம்

azசிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி ஆண்டு இறுதிக்குள்  நாட்டின்  உயர்த்  தலைமைத்துவம்  மாறும்  என்று  நம்புகிறார்.

நாடாளுமன்றத்தில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  எதிராக  நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  கொண்டு  வருவதில்  பிஎன்  எம்பிகளுடன்  சேர்ந்து  கொள்வாரா  என்று வினவப்பட்டதற்கு  அஸ்மின்  இவ்வாறு  கூறினார்.

“இப்போது  பக்கத்தான்  ரக்யாட்  88 எம்பிகளைக்  கொண்டிருக்கிறது. எங்களுக்குத்  தேவை  இன்னுமொரு 30(எம்பிகள்). இன்ஷா அல்லாஹ்,  ஆண்டு  இறுதிக்குள்  மாற்றத்தைக்  காணலாம்.

“ஜனநாயக ஆட்சிமுறையில்  இதற்கு  அனுமதி  உண்டு”, என  ஷா  ஆலமில்  செய்தியாளர்களிடம்  அஸ்மின்  தெரிவித்தார்.

மாற்றத்தை  விரும்பும்  எம்பிகளுடன்  ஒத்துழைக்க  பக்கத்தான்  ரக்யாட்  தயார்  என்றும்  அவர்  சொன்னார்.

“அம்னோ  பிஎன்  எம்பிகள்  நாட்டைப்  பாதுக்காக்கவும்  பொருளாதாரத்தை  மேம்படுத்தவும்  துணிச்சல்  கொண்டர்களாக  இருக்க  வேண்டும்.

“இப்போதைய  தலைமையில்  நாடு  மோசமான நிலையில்  உள்ளது. நம்  நாணயத்தை,   (முதலீட்டாளர்களின்) நம்பிக்கையைப்  பாருங்கள்.

“இவை  நாட்டையே  அழித்து  விடும்”, என்றாரவர்.