நேற்று மாலையிலிருந்து பெர்சே இணைய தளத்தை(www.bersih.org)த் திறக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
மலேசிய தொடர்ப்பு, பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) வாரக் கடைசிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெர்சே பேரணியை ஊக்குவிக்கும் இணையத் தளங்களும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி விலகக் கோரிக்கை விடுக்கும் இணையத் தளங்களும் முடக்கப்படும் என்று நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது. “அப்படிப்பட்ட இணையத் தளங்களால் நாட்டின் நிலைத்தன்மைக்கு ஆபத்து” என்று அது கூறிற்று.
பெர்சே இணையதளத்தைத் திறக்க முயன்றால் ‘Error 404’ என்றுதான் காணப்படுகிறதே தவிர, அந்த இணையத்தளம் எம்சிஎம்சியால் முடக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு எதையும் காணவில்லை.
மலேசியாகினி எம்சிஎம்சி-யைத் தொடர்புகொள்ள முயன்று வருகிறது.
மசீச சீனர்கள் பேரணியில் கலந்துகொள்ளலாம் என்று முடிவு சொல்லிவிட்டது. நமது மஇகா எப்பொழுது வீரமான இந்ந முடிவை
சொல்லும் பெர்செஹ் 4 முடிந்தவுடனா???????????????.
முடங்கியது பெர்சே. 4 அல்ல ஜனநாயகம்.
கூறுகெட்ட பல்லூடகம் சீப்பை ஒழிச்சிட்டா கலியாணம் நின்னுடுமா?