பூமிபுத்ராக்களின் எதிர்காலத்திற்காக போராடும் ஓர் அரசு சார்பற்ற அமைப்பு (என்ஜிஒ) பெர்சேயின் முன்னாள் தலைவர் அம்பிகாவுக்கு அதன் நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளது.
கோரிக்கைகளை எழுப்புவதற்கு எழுச்சி பெற வேண்டும் என்பதின் முக்கியத்துவத்தை அம்பிகா எங்களுக்கு உணர வைத்தார் என்று அந்த அமைப்பின் தலைவர் சுல்கார்னாயின் மாடார் கூறினார்.
“நாங்கள் அம்பிகாவுக்கு நன்றியுடையவர்களாக இருக்கிறோம் ஏனென்றால் அவர் எழுப்பிய கோரிக்கைகள் நாங்களும் பூமிபுத்ராக்களுக்காக அரசாங்கத்திடம் கோரிக்கைகளை எழுப்ப வேண்டும் என்பதை எங்களுக்கு உணர்த்தியது”, என்று அவர் கோலாலம்பூரில் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
நன்றி வாழ்க வளமுடன்.
இதில் ஏதும் உள்குத்து இல்லையே !?
உள்குத்து உள்ளது நண்பரே. நீங்கள் எப்படி போராடுவதற்கு எழுச்சி பெற வேண்டும் என்கிறீர்களோ அதே போல பூமிபுத்ராக்களுக்காக போராட இனி நாங்களும் எழுச்சிப்பெறுவோம் என்று நக்கலாகக் கூறுகிறார். பூமிபுத்ராக்கள் புதிதாகப் போராட என்ன இருக்கிறது? அது தான் அனைத்தையும் வாரி சுருட்டி விட்டார்களே!