பெர்சே 4 டி-சட்டை அணிவது இப்போது சட்டவிரோதமாகும். இன்று மாலை அரசாங்கம் இத்தடையை அதன் கெஜட்டில் பதிவு செய்து வெளியிட்டுள்ளது. பெர்சே 4 டி-சட்டையும் பெர்சே 4 பேரணி சம்பந்தப்பட்ட இதரப் பொருள்களும் “விரும்பத்தகாதவை” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இச்செயல்முறை உத்தரவு இன்று மாலை சட்டத்துறை அலுவலக அகப்பக்கத்தில் பதிவு செய்யப்பட்டது.
இத்தடை உத்தரவு பெர்சே 4 பேரணி நாளை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது.
ஐயோ ஐயோ ஒரே காமிடிய இருக்கு போங்க. மினிஸ்டர் அதுவும் உள்துறை மினிஸ்டர் தி சட்டையை தடை செய்து சாதனை படைச்சிட்டாறு.
சமதர்மம்… சம உரிமை …. பாகுபாடு இல்லாத சமூகம் என்றெல்லாம் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளும் பெர்சே அமைப்பு தமிழை மட்டும் புறம்தள்ளி விட்டது ஏன் ??? மலேசியாக்கினி ஆங்கில அகப்பக்கத்தில் பெர்சே விளம்பரத்தில் ஆங்கிலம் , மலாய், சீனம் ஆகிய மொழிகளில் விளம்பரம் செய்திருக்கும் பெர்சே, தமிழில் ஒரு வரி கூட சேர்க்கவில்லை !!! தமிழும் தமிழனும் இவர்களுக்கு என்ன அவ்வளவு இழுக்கா ?? பெர்சே நோக்கத்தில் எனக்கு உடன்பாடுதான் ஆனால் என் மொழியையும் , சமூகத்தையும் புறம்தள்ளும் அல்லது புறக்கணிக்கும் இந்த அமைப்பின் இறுமாப்புக்கு என் சமூகத்தின் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க வேண்டுமா? கூட்டம் கூடி கோழம் போடும் செம்மறியாட்டு மந்தை அல்ல என் இனம் … எங்கே நமது உரிமை பாதுகாக்கப் படவேண்டுமோ அங்கே நம் உரிமையை நிலை நிறுத்த வேண்டும் என்பதே என் நோக்கம். எவ்வளவு சுலபமாக நம் சமூகத்தை புறந்தள்ளி சிறுமை படுத்தி இருக்கிறது இந்த அமைப்பு… அந்த அமைப்பில் சில இந்தியர்களின் படங்களும் அவ்வப்போது ஊடகங்களில் வெளிவருகின்றன…ஒருவேளை அந்த இந்தியர்கள் விளம்பர பதுமைகளோ … கோபம் கொள்ளாமல் நிதானமாக யோசியுங்கள் . உங்களில் ஒருவன்
மஞ்சள் சட்டைக்கு தடையா? இந்து சங்கமே வரும் தைப்பூசம் மற்றும் கோவில் திருவிழா காலங்களில் பால் குடம் காவடி எடுக்கும் பக்தர்கள் என்ன கலர் சட்டை போட வேண்டும் என உள்துறை அமைச்சரிடம் இப்போதே கேட்டு மக்களுக்கு சொல்லவும் . கடைசி நேரத்தில் சொன்னால் உள்துறை அமைச்சர் விரும்பும் கலர் துணி கிடைக்காமல் போகலாம் இல்லை என்றால் சில வியாபாரிகள் விலை ஏற்றி விடலாம் . இனி எங்கு போனாலும் என்ன கலர் சட்டை போடா வேண்டும் என நம் உள்துறை அமைச்சர் புது புது சட்டம் போடலாம் .
காரியம் ஆகுரவரைக்கும் கால் பிடிச்சி … காரியம் ஆனதும் எட்டி உதைக்கிரவனை தலைமேல் கொண்டாடும் வரை நமக்கு இந்த கதிதான்
“உங்களில் ஒருவன்” சொல்லுவது உண்மை தான். ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தாலும் தமிழைப் புறந்தள்ளுவது சர்வ சாதாரணம். அந்த அளவுக்கு நம்மை ஏமாளிகளாக அவர்கள் நினைக்கிறார்கள். முன் நின்று ஏற்பாடுகள் செய்கிறானே அந்தத் தமிழனுக்குத் தமிழ்ப் பற்று வரும்வரை இது தொடரத் தான் செய்யும்!
“BERSIH 4″-ன் முதல் வெற்றி :
அரசாங்கம் “BERSIH 4″ இணைய தளத்தை முடக்கியது
“BERSIH 4″-ன் இரண்டாவது வெற்றி :
அரசாங்கம் “BERSIH 4″ சட்டவிரோத பேரணி அறிவித்தது.
“BERSIH 4″-ன் மூன்றாவது வெற்றி :
அரசாங்கம் அவசரகாலத்தை பிரகடனப்படுத்தும் அளவுக்கு, யோசிக்க வைத்தது.
“BERSIH 4″-ன் நான்காவது வெற்றி :
அரசாங்கம் BERSIH 4 டி-சட்டை அணிவதற்கு தடைவிதித்தது.
“BERSIH 4″-ன் ஐந்தாவது வெற்றி :
பேரணி நாளான 29-30 தேதிகளில் கலந்து கொள்ள அலை கடலென திரள போகும் மாபெரும் “மஞ்சள்” கூட்டத்தினரை கண்டு கதி கலங்கி, அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் அரசாங்கமும் பாதுகாப்பு படையினரும் விழி பிதுங்கி நிற்க போவது.
எவனும் அந்த மந்திரியின் ஆணையை மதிக்கவில்லை என்றால் இந்த மந்திரி நாக்கை புடுங்கிக் கொண்டு சாக வேண்டியதுதானே?