இன்னும் சற்று நேரத்தில் கோலாலும்பூர், கூச்சிங், கோத்தா கினாபாலு ஆகிய நகரங்களில் பெர்சே 4 பேரணி தொடங்கும்.
பேரணியும் பேரணியின் அடையாளமான மஞ்சள்நிற டி-சட்டை அணிவதும் சட்டவிரோதமானவை என போலீஸ் அறிவித்துள்ளது. என்றாலும் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்குமுன் 2012ஆம் ஆண்டு பெர்சே பேரணியில் 100,000 கலந்துகொண்டு தூய்மையான, நேர்மையான தேர்தலுக்குக் கோரிக்கை விடுத்தார்கள்.
இவ்வாண்டு பேரணி முன்வைத்துள்ள கோரிக்கைகள் வருமாறு:
தூய்மையான தேர்தல்
தூய்மையான அரசாங்கம்
மறுப்புத் தெரிவிக்கும் உரிமை
நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்தல்
பொருளாதாரத்தைப் பாதுகாத்தல்
இவ்வாண்டு 1எம்டிபி, சொந்த வங்கிக் கணக்கில் சேர்ப்பிக்கப்பட்டது, அதை மத்திய கிழக்கிலிருந்து வந்த நன்கொடை எனக் கூறிக்கொள்வது போன்ற விவகாரங்களினால் பிரதமர் நஜிப்மீது மக்கள் கோபம் கொண்டிருக்கும் வேளையில் பேரணி நடப்பதால் நஜிப்பின் பதவி விலகலுக்கும் கோரிக்கை விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தயவுசெய்து இலஞ்சம் வாங்காத,மதம்,இனம் பார்க்காத படிக்கதெரிந்த ஆங்கிலம் புலமை பெற்ற காவல் துறை தேவை என்பதையும் வலியுறுத்தவும்.