பிஎன் அரசாங்கம் டி-சட்டைகளைப் பார்த்து பயப்படுவது தேவையற்றது என்கிறது பாஸ்.
“பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீதுள்ள நம்பிக்கை, பொருளாதாரத்தின் மோசமான நிலை, நஜிப்பின் பிம்பம் சரிந்திருப்பதால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைந்திருப்பது ஆகியவற்றை எண்ணித்தான் அவர்கள் அஞ்ச வேண்டும்”, என பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மஞ்சள்நிற டி-சட்டைகளுக்குத் தடை போட்டதன்வழி நஜிப்புக்குக் குழி பறிக்கிறாரா என்றும் அவர் வினவினார்.
“மக்கள் துன்பப்படுகிறார்கள். இந்நிலையில் மடத்தனமான முடிவுகள் மக்களின் கோபத்தைத்தான் மேலும் தூண்டிவிடும்.
“பொருளாதாரத்தை நிலைப்படுத்த வேண்டுமானால் முதலில் மடத்தனமாக முடிவு செய்வதை நிறுத்துங்கள் என நஜிப்பின் சகோதரர் நசிர் அப்துல் ரசாக் முன்வைத்த அறிவுரைக்குச் செவிசாய்க்க நஜிப்பும் அவரின் அமைச்சர்களும் மறுப்பது ஏன்?”, என்று துவான் இப்ராகிம் வினவினார்.
இனி …
இந்து வழிபாடு
தளங்களுக்கு ….
செல்பவர்கள் ….
சிகப்பு வண்ண ஆடையை ….
அணிய வேண்டுமோ ??
இந்து சங்கத்தின் …
நிலைப்பாடு என்ன ??