பிற்பகல் 2 மணி அளவில் சுமார் 30ஆயிரம் பேர் கோலாலும்பூர் மத்தியில் திரண்டிருப்பதாக மலேசியாகினி நிருபர்கள் மதிப்பிட்டிருந்தனர்.
பேரணியில் கலந்து கொண்டிருப்பவர்களுக்குப் பல தரப்பினரும்
ஊக்கமளித்து வருகிறார்கள்.
Nandos உணவகம் இலவச பானங்களை வழங்கி வருகிறது.
இன்னும் சிலர் பேரணி பங்கேற்பாளர்களின் தாகத்தைத் தீர்க்க 200 பெட்டிகளில் கணிம நீர் போத்தல்களை வழங்கியுள்ளது.
ஒரு உணவகம் உணவும் பானங்களும் இலவசம் என்று அறிவித்திருந்தது.
மாணவர் போராட்டவாதி ஆடம் அட்லி ஜாலான் ஹங் துவாவிலிருந்து செண்ட்ரல் மார்க்கெட்டை நோக்கி 300 பேருடன் சென்றபோது BangsArt குழுவினர் மேளங்களை முழக்கியபடி அவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டு உடன் சென்றனர்.
தெருவோரங்களில் நிற்கும் பெர்சே பங்கேற்பாளர்கள் பலவகை பதாகைகளைத் தாங்கி நிற்கிறார்கள். சில, “நாஜிப் பதவி விலகவில்லையென்றால் மக்கள் புல்லைத்தான் தின்ன வேண்டியிருக்கும்” என்ற வாசகத்தைக் கொண்டிருந்தன. பெரும்பாலான பங்கேற்பாளர்கள் “பெர்சே, பெர்சே” என்று முழக்கம் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
சாலைகளில் செல்லும் வாகனங்களும் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஹாரன் ஒலி எழுப்பியவாறு செல்கிறார்கள்.
பெர்சே.4 பேரணி விழாக்கோலம் பூண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.
வெட்க்கம் கெட்டவன் பதவி விலக மாட்டன் சுரணை இல்லாதவன்.