மெர்டேகாவை முன்னிட்டு கருத்துவேறுபாடுகளைத் தள்ளி வைப்பீர்: சாலே வேண்டுகோள்

merdekaமலேசியர்கள் தங்கள்  அரசியல்,  சித்தாந்த  வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து  விட்டு  தேசிய  நாளைக்  கொண்டாடுவதில்  ஒன்றுபட  வேண்டும்  எனத்  தொடர்பு,  பல்லூடக  அமைச்சர்  சாலே  சைட்  கெருவாக்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“நாம்  ஒன்றுபட்டிருப்பதைக்  காண்பிக்க  தேசிய  நாளைக்  கொண்டாடுகிறோம். நாடுதான்  நமக்கு  எல்லாமும்  என்ற  நம்பிக்கை நமக்கு  இருக்கும்போதுதான்  நம்மால்  முன்னேற  முடியும்”. இன்று  டட்டாரான்  மெர்டேகாவில் தேசிய  நாள்  கொண்டாட்டத்துக்கான  முழு  ஒத்திகைக்குப்  பின்னர் அமைச்சர்  செய்தியாளர்களிடம்  பேசினார்.

ஆகஸ்ட்  31 தேசிய  நாளாகும்.  இவ்வாண்டு  தேசிய  நாள் ‘Sehati Sejiwa’ (ஒரே  உள்ளம்  ஒரே  உணர்வு)  என்ற  கருப்பொருளில்  கொண்டாடப்படுகிறது.