பெர்சே 4 பேரணியில் ஓர் இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள்

 

Bersih4-7கோலாலம்பூர், மெர்தேக்கா டாட்டாரான் – பெர்சே 4 பேரணியில் பங்கேற்பதற்காக வந்துள்ள மக்களின் எண்ணிக்கை ஓர் இலட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. பிற்பகல் மணி 4.10 அளவில் சிலர் அங்கிருந்து திரும்பிக் கொண்டிருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.

பிரிக்பீல்ட்ஸ் பகுதியிபிருந்து சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு வந்து சேர்ந்த பெர்சே 4 பேரணி ஆதரவாளர்கள் 2,000 க்கு மேல் கூடியது.

இக்கட்டத்தில் அங்கு வந்து சேர்ந்த பெர்சேயின் முன்னாள் இணைத் தலைவர் அம்பிகாவை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று அவருடன் செல்பியும் எடுத்துக் கொண்டனர்.

“திகைப்பூட்டுகிற கூட்டம். அவர்கள் (அரசாங்கம்) பெர்சே டி-சட்டைக்கு தடை விதித்திருந்த போதிலும், மக்கள் அஞ்சவில்லை”, என்று அம்பிகா செய்தியாளர்களிடம் கூறினார்.

பெர்சே 2, மற்றும் பெர்சே 3 ஆகியவற்றை விட பெர்சே 4 மிகப் பெரிய பேரணியாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மலாய்க்காரர்-அல்லாதவர்கள் பெருமளவில் திரண்டு வந்திருப்பது குறித்து கருத்துரைத்த அம்பிகா, இதில் மிக முக்கியமானது “மலேசிய மக்கள்” திரண்டு வருகின்றனர் என்பதாகும் என்றாரவர்.

 

கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா?

 

பெர்சே 4 பேரணியில் கலந்து கொண்டு இரவை கோலாலம்பூரில் கழிக்கவிருக்கும் பொதுமக்களுக்கு அதிகாரிகளிடமிருந்து பெரும்Bersih4-8 பிரச்சனைகள் ஏதும் எழாது என்று தாம் நம்புவதாக டிஎபி நாடாளுமன்ற கொரடா அந்தோனி லோக் மலேசியாகினியிடம் கூறினார்.

அப்படி ஏதும் எடுக்கப்பட்டால் அது எப்ஆர்யுக்கும் போலீசுக்கும் பெரும் பிரச்சனையாகிவிடும் என்றாரவர்.

இதுவரையில், பேரணியில் அதிகாரிகளின் தலையீடு கிடையாது என்பது தெரிகிறது என்று அந்தோனி லோக் மேலும் கூறினார்.