பெர்சே 4: நஜிப் வெளியேற்றப்பட வேண்டும், பெக்கான் பெண்கள்

 

மாலை மணி 6.30 அளவில் பேரணியில் கலந்து கொண்டிருப்பவர்களை ஓய்வெடுத்துக்கொள்ளுமறு பெர்சே 4 பேரணி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்ட வேளையில், பகாங், பெக்கானிலிருந்து வந்திருந்த அலிமின் என்று மட்டும் அடையாளம் கூறிக்கொண்ட ஒரு பெண் தாம் அங்கேயே இரவைக் கழிக்கப் போவதாக கூறினார்.

பெர்சே இப்போது முன்னெடுத்துள்ள பிரச்சனை முன்பு எடுத்துக்கொண்டதிலிருந்து வேறுபட்டது. முன்பு, அது தேர்தல் சம்பந்தப்பட்டது. இப்போது அது பிரதமரை மாற்றுவது பற்றியதாகும் என்று அலிமின் கூறினார்.

“அதனால்தான் நான் இங்கே இருக்கிறேன்”, என்றாரவர்.

தமது நான்கு உறவினர்களுடன் இப்பேரணியில் கலந்து கொள்ள வந்துள்ள அய்ஸா போர்ஹான் என்ற 18 வயது பெண் பிரதமர் மீதான தங்களுடைய அதிருப்தியைத் தெரிவிக்கவே தாங்கள் இங்கு வந்துள்ளதாக கூறினார்.

மக்கள் விழிப்படைந்து தலைமைத்துவம் மாற்ற வேண்டியதின் தேவையை உணர்வார்கள் என்று நம்புவதாக அவர் கூறினார்.