முன்னாள் பிரதமர் மகாதிரும் அவரது துணைவியாரும் பெர்சே 4 பேரணிக்கு திடீர் வருகை மேற்கொண்டனர். அவர்களது வருகை டாத்தாரான் மெர்தேக்கா மற்றும் கோலாலம்பூர் மாநகர் மண்டபத்திற்கிடையிலான பகுதியில் குழுமியிருந்து மக்களை அதிர்சி அலையில் மூழ்கடித்தது.
சுமார் இரவு மணி 7.30 க்கு அங்கு வந்த அத்தம்பதிகளை பேரணிக்கு வந்திருந்தவர்கள் சூழ்ந்து கொண்டு அவர்களது கைகளைக் குலுக்கி அவர்களுடன் சேர்ந்து படமெடுத்துக் கொண்டனர்.
ஊடகத்தினரும் அந்த இடத்திற்கு ஓடோடி வந்தனர்.
சாம்பல் நிற புஸ்கோட் அணிந்திருந்த மகாதிர் பிகேஆரின் உதவித் தலைவர் தியன் சுவாவும் முன்னாள் பிரதமரின் பாதுகாவலர்களும் புடைசூழ அங்கு வந்து சேர்ந்தார்.
இதில் முரண்சுவையானது என்னவென்றால் 1998 இல் அன்வார் இப்ராகிமைமை பதவியிலிருந்து மகாதிர் அகற்றியதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ரிபோமாஸி ஆர்ப்பாட்டங்களின் போது மகாதிரை மிகக் கடுமையாகச் சாடியவர் தியன் சுவா!
பல நிமிடங்களை அங்கு கழித்த பின்னர் மகாதிரும் சித்தி ஹஸ்மாவும் ஒரு காரில் புறப்பட்டு சென்றனர்.
பிரதமர் நஜிபுக்கு சரியான அடி இனிமேலும் பதவியில் இருபதைவிட விலகிச் செல்வதே நல்லது…?
Long Live Najip! May you reign Malaysia forever and please ensure mamak cartoon is sent to sungai buloh prison for good !!!
இவர் வந்த நேரத்தில் அங்குதான் நின்று இருந்தேன் ! ஆடு மழையில் நினையுதே என்று ஓநாய் அழுத கதை நினைவுக்கு வந்தது ,
திரு நந்தா அவர்களே.வலதுப்பக்கம் மூன்ராவதாக முகம் மலர சிரிப்பது நீங்களா ?
சுதந்திரம் முதல் இன்று வரை நாம் வஞ்சிக்கபட்டுள்ளோம் அதில் முக்கிய பங்கு இவனுடையது.இனவெறி இவன் ஆயுதம்! முதல் கோணல் முற்றுங் கோணல்! மதம் என்ற போர்வையில் மக்களை பிரித்து ஆட்சி செய்த சுயநல நாதாரி!
மகாதீரின் வருகை : வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்
, ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் .
துன் அவர்களே நீர் இந்தியர்களுக்கு செய்த துரோகம் மன்னிக்க மறக்க முடியாது.நீர் ஒரு குள்ளநரி என்பது யாவரும் அறிந்ததே.உனக்கு அந்த 2.7 பில்லியன் கிடைக்கவில்லை என்ற அங்கலாப்புதான்.
மகாதிர் அவர்களே நீங்கள் இந்தியர்களுக்கு எந்த துரோகமும் செய்யவில்லை ,சீனர்களுக்கும் நீங்கள் த்ரோகம் செய்யவில்லை ,ஆனால் சீனர்கள் இந்த நாட்டில் எப்படி சிறப்பாக வாழ்கிறார்கள் ,நம் இந்தியர்கள் கையாலாகாதவர்கள் ,ஒற்றுமை இல்லாதவர்கள் ,அடுத்தவர்களுடைய முன்னேற்றத்தை தடுப்பவர்கள் ,அனால் உங்களை குறை சொல்வதற்கு மட்டும் வாய் கூசாது ,,இதுதான் இந்தியன்
தலைவா! இப்போது நீங்கள் செய்வது சரி தான்! நமக்கு வேண்டியதெல்லாம் திறமையான அரசாங்கம், கிடு கிடு விலைவாசியைக் கட்டுப்படுத்தல், மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல் மீண்டும் நாட்டைச் சரியான வழியில் வழி நடத்துதல். உங்களோடு ஒப்பிடும் போது நஜிப் இந்தியர்களுக்கு நல்லதையே செய்திருக்கிறார். ஆனாலும் நாட்டிற்குச் செய்த துரோகம் அதிகமே!