பெர்சே 4: “புத்ரா ஜெயா, தூய்மையாக இரு”

 

bersih4-11பெர்சே 4 இன் இரண்டாவது நாள் நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. அதிகாலையிலிருந்தே பெர்சே 4 பேரணியினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினர்.

இரவெல்லாம் தூங்காமல் பலர் சித்திரம் வரைவது போன்றவற்றில் ஈடுபட்டிருந்தினர்.

ஜாலான் ராஜா பகுதியில் பலர் தங்களுடைய உறக்கத்திலிருந்து எழுந்து அங்கிருந்த 4,000 க்கு மேற்பட்ட ஆதரவாளர்களுடன் சேர்ந்து கொண்டனர். இன்னும் அதிகமான பேரணியினர் ஜாலான் துன் பேராக் வழி வந்து கொண்டிருந்தனர்.

இச்சமயத்தில் நான்கு அரச மலேசிய விமானப்படையின் ஹெலிகோப்டர்கள் பறந்து சென்றன. அங்கிருந்தவர்கள் தங்களுடைய கைகளை அசைத்து “பெர்சே” என்று முழக்க மிட்டனர்.

பெர்சே 4 ஆதரவாளர்கள் அங்கு காணப்பட்ட குப்பைகளை அகற்ற அலாம் புளோரா பணியாளர்களுக்கு உதவினர்.bersih4-12

காலை மணி 9.00 அளவில் ஜாலான் ராஜா வழியாக 40 போலீசார் தங்களுடைய மோட்டார் சைக்கள்களில் வலம் வந்தனர்.

இதனிடையே, காலை உடற்யிற்சி தொடங்கியது.

பெர்சே 4 கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஐவி ஜோஸ்யா உடற்பயிற்சி நிகழ்ச்சியைத் தொடக்கினார். அதில் பெர்சே 4 தலைவர் மரியாவும் கலந்து கொண்டார்.

அம்மேடையில் உடற்பயிற்சியை குழந்தைகள் விரும்பும் நடனத்தோடு தொடங்கிய ஐவி, “புத்ரா ஜெயா, தூய்மையாக இரு, நாங்கள் உன்னை கவனைத்துக் கொண்டிருக்கிறோம்”, என்று பாடினார்.

அங்கிருந்த பெர்சே 4 பேரணியினரும் அதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.