ஜாஹிட்: பெர்சே 4 ஏற்பாட்டாளர்மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி

actionபெர்சே 4  பேரணியை  ஏற்பாடு  செய்வதற்கு  அச்சாணியாக  இருந்தவர்மீது  அதிகாரிகள்  கடுமையான  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  எனத்  துணைப்  பிரதமர்  அஹ்மட் ஜாஹிட்  ஹமிடி  வலியுறுத்தியுள்ளார்.

பேரணிக்குப்  பின்னணியில்  இருந்து  செயல்பட்டவர்களையும்  அதிகாரிகள்  கண்காணிக்க  வேண்டும்  என  உள்துறை  அமைச்சருமான  ஜாஹிட்  கூறினார்.

“அவர்கள்  என்னென்ன  செய்தார்கள்  என்பது  எங்களுக்குத்  தெரியும்”, என்றாரவர். ஜாஹிட்  ஹமிடி ஈப்போவில்  ஈப்போ  தீமோர்  அம்னோ  தொகுதிக்  கூட்டத்தைத்  தொடக்கிவைத்த  பின்னர்  செய்தியாளர்களிடம்  பேசினார்.

பேரணி  ஏற்பாட்டாளர்களின்மீது  எடுக்கப்படும்  சட்ட
நடவடிக்கைகளை விவரித்த  அவர்,  மற்றவற்றோடு  அமைதிப்  பேரணிச்  சட்டம்.  தேச நிந்தனைச்  சட்டம், குற்றவியல்,  போலீஸ்  சட்டங்கள் ஆகியவை அவர்கள்மீது  பாயலாம்  என்றார்.