நஜிப்: பெர்சேக்குச் சென்றவர்கள் 20,000-தான். மற்றவர்கள் அரசாங்கத்தின் பக்கம்

20000தம்மைப்  பதவி  விலகக்  கோரும் பெர்சே  பேரணி  பற்றிப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கொஞ்சமும்  கவலைப்படவில்லை.  “மலேசியாவில்  உள்ள  மற்றவர்களின்”  ஆதரவு தம்  அரசாங்கத்துக்கே  என்றவர்  கூறிக்கொண்டார்.

சில  ஊடகங்களில்  வந்துள்ள  செய்திகள்போல் 20,000  பேர்  பேரணிக்குச்  சென்றிருக்கலாம்.  ஆக 20,000  பேர்தான்  ஓரளவுக்கு  அதிருப்தியுற்றிருக்கிறார்கள்.

மற்ற  மலேசிய  மக்கள்  “அரசாங்கத்தின்  பக்கம்தான்”, என்று  நஜிப்  கூறியதாக  த  ஸ்டார்  ஆன்லைன்  தெரிவித்தது.

கோலா  திரெங்கானு  சென்றுள்ள  நஜிப்,  “20,000  என்ன  பெரிதா”  அரசாங்கத்தால்  இலட்சக்கணக்கானவரைத்  திரட்ட  முடியும்  என்றார்.

பெர்சே 4  மக்களின்  நலனைக்  கருத்தில்  கொண்டிருக்கவில்லை  எனவும்  அவர்  குற்றஞ்சாட்டினார்.