பெர்சே பேரணி முடிந்து விட்டாலும் பேரணி பங்கேற்பாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் சாத்தியம் இருப்பதாக துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி எச்சரித்துள்ளார்.
“(பேரணியில்) யாரும் கைது செய்யப்படவில்லை என்பதால் போலீசும் கோலாலும்பூர் மாநகர் மன்றமும் மற்ற அமலாக்கத் துறைகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது பொருளல்ல.
“நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். பேரணியில் தலைவர்களின் ஒவ்வொரு செயலையும், பேசிய ஒவ்வொரு சொல்லையும் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.
“பேரணிக்குப் பின்னணியில் இருந்தவர்களையும் கண்காணித்து வருகிறோம்”.
குறிப்பாக, வெள்ளிக்கிழமை தடை செய்யப்பட்ட மஞ்சள் நிற பெர்சே 4 டி-சட்டை அணிந்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாரவர்.
பேரணியின்போது சட்டமீறலில் ஈடுபட்டதாகக் கண்டுபிடிக்கப்படுவோரும் கைது செய்யப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் எச்சரித்தார்.
சும்மா மிரட்டி கொண்டு இருக்காமல் . பேரணியில் கலந்து கொண்ட மகாதிரின் அம்னோ உறுப்பியத்தை பறிக்க துணிவு இருக்கிறதா ? உங்களுடைய மிரட்டல் எல்லாம் சாமாலிய மக்களிடம் மட்டுமே எடுபடும் .
வந்துட்டறையா மக்களால் மதிக்கப் படாத manthiri
சீக்கிரமா அதை செய்யுங்கள் ஜிரோ அவர்களே .
உங்களுடைய தடைகளை எல்லாம் சுக்கு நூறாக உடைத்து விட்டது “B4” பேரணி, இதற்கு பிறகும் “கைது நடவடிக்கை” என நகைச்சுவை தேவையா ?
உங்கள் எச்சரிக்கையை கண்டு எங்கள் உள்ளம் நடுநடுங்குகிறது.. போடா நீயும் உன் எச்சரிக்கையும்..
கக்காதிர் பேரணியில் கலந்து ஆதரவு தந்தாரே . அவர்மீது சட்ட நடவடிக்கை உண்டோ மன்மத மந்திரியாரே ? பெர்சே எதிர்ப்பு கும்பல் சோகோ முன்பு அடாவடி செய்தனர் அவர்கள் மீது நடவடிக்கை இல்லையோ நறி மந்திரி ?
கைது செய்து பார் ,,அதன் விளைவுகள் படு மோசமாக இருக்கும்
முதலில் இந்த மந்திரியிடம் உள்ள ஆணவப் பேச்சையும், பக்கா பொய்சொல்லும் திறமையையும் ஒடுக்கணும்.நஜிப்பிற்கு இவன் ஒரு பெரிய தலைவலியாக இருப்பான் என்பது உறுதி.
இந்தோனேசியாவில் இருந்து பிழைக்க வந்தவனுக்கு உள்ள திமிரை பாருங்கடா.இங்கு ஆட்சி மாற்றம் ஏற்படுமானால் இவன் தன் மூதாதையர்களான ராட்சத உடும்புகள் [KOMODO DRAGON] வாழும் இந்தோனேசியா தீவு கூட்டங்களுக்கு தப்பித்து ஓடிவிடுவான்.