அரசாங்கம் நம்பிக்கைக்குறைவு என்ற பிரச்னையை எதிர்நோக்கி வருவதாக முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறினார்.
“அரசாங்கத்தின்மீது மக்களின் நம்பிக்கை குறைந்து விட்டது”, என்றாரவர்.
நேர்மை, பொறுப்புடைமை போன்ற கோட்பாடுகள் சரிவுகண்டு வருவதுபோல் தோன்றுவதைக் கண்டு மக்கள் கவலை அடைந்திருப்பதாக முகைதின் தம் மெர்டேகா செய்தியில் கூறினார்.
“அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் அரசாங்க அதிகாரிகளின் சேவை முடிவுக்குக் கொண்டு வரப்படுகிறது.அவர்கள் பணியிடமாற்றம் செய்யப்படுகிறார்கள். மிரட்டப்படுகிறார்கள்.
“அர்ப்பணிப்பு உணர்வுகொண்ட அரசாங்க அதிகாரிகள், பொதுச் சேவை கோட்பாடுகளை மீற முயலும் மேலதிகாரிகளுக்கு எதிராகக் குரல் எழுப்ப முன்வருவது பொதுச் சேவை வரலாற்றில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று”, என்றாரவர்.
கருத்துச் சொல்லும் மக்களின் உரிமையை குறிப்பாக சமூக வலைத்தளங்களில் ஒடுக்கப்போவதாக சில அரசியல்வாதிகள் மிரட்டியுள்ளனர். ஏனென்றால், இத்தலைவர்கள் நாள்தோறும் பெருகி வரும் மக்களின் குறைகூறல்களையும் கண்டன உரைகளையும் காது கொடுத்துக் கேட்க ஆயத்தமாக இல்லை.
“இத்தலைவர்களைக் கண்டிக்க முனைவோர் துரோகிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். அரசாங்கத்தைக் கவிழ்க்க முனைவதாகக் குற்றம் சாட்டப்படுகிறார்கள்.
“தலைவரை இடித்துரைப்பதற்கும் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்குமிடையே உள்ள வேறுபாட்டை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை”, என முகைதின் கூறினார்.
அம்னோ அகராதியில் “தலைவரை இடித்துரைப்பது” என்பது அரசாங்கத்தைக் கவிழ்ப்பது என்பது பொருள். நீங்கள் பதவியில் இருந்தபோது கூட அப்படித்தான் அகராதியில் போட்டிருந்தார்கள். அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட்டீர்களே!
முன்னாள் துணை பிரதமருக்கோ “அரசாங்கத்தின் மீது நம்பிக்கை குறைந்து வருவதை” பற்றி கவலை ; முன்னாள் பிரதமருக்கோ “நாடு மிகவும் மோசமான நிலைக்கு தள்ள பட்டு விட்டது” என கவலை.
இருவரும் “கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து” என்ன பலன் ?
ஆமாம்! நீயும்,காக்காவும் நாட்டை சூரையாடிக்கொண்டு இருந்தபோது மக்களுக்கு அரசாங்கத்தின் மேல் நம்பிக்கை நிறையே இருந்தது தற்போது குறைந்து விட்டது!!!