உலக ஊழல் எதிர்ப்பு அமைப்பின் தலைவர் நஜிப்பை சாடினார்

 

TI-internationalslamsnajib1பிரதமர் நஜிப்பை சுற்றியிருக்கும் ஊழல் விவகாரத்திற்கு பதில் வேண்டும் என்று டிரேன்ஸ்பேரன்ஸி இண்டர்நேசல் (டிஐ) தலைவர் ஜோஸ் உகாஸ் கூறுகிறார்.

இன்று, புத்ரா ஜெயாவில் 16 ஆவது அனைத்துலக ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் தொடக்க உரையாற்றிய உகாஸ் ஊழலை கையாள்வதற்கு மலேசியா பல நடவடிக்கைளை எடுத்துள்ளது என்றார்.

“நாங்கள் மேற்கொண்டு முன்னேற்றங்களைக் காண விரும்புகிறோம். ஆனால், பிரதமரின் தனிப்பட்ட கணக்கில் யுஸ்$700 மில்லியன் வைக்கப்பட்டதற்கு பதில் அளிக்கப்படாத கேள்விகள் இருப்பதால், அது நடக்காது என்று பலத்த கைட்தட்டுகளுக்கிடையில் அவர் கூறினார்.

சமீப வாரங்களில் சட்டத்துறை தலைவர் மாற்றப்பட்டுள்ளார், 1எம்டிபி சிறப்பு விசாரணைக்குழு கலைக்கப்பட்டுள்ளது மற்றும் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர் அல்லது மாற்றம் செய்யப்பட்டனர் என்பதோடு அவ்விவகாரங்கள் குறித்து செய்தி வெளியிட்ட ஊடகங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன என்று அவர் சுட்டிக் காட்டினார்.

“இவை ஊழலை எதிர்த்துப் போராடும் ஓர் அரசாங்கத்தின் செயல்பாடுகள் அல்ல”, என்று மீண்டும் ஒரு பெரிய கைத்தட்டல்களுக்கிடையில் உகாஸ் கூறினார்.

“அக்கேள்விகளுக்கு ஒரு மனிதர் பதில் அளிக்க முடியும்”, என்றாரவர்.

இம்மாநாட்டை பிரதமர் நஜிப் திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால், அவருக்கு எதிராக ஏதேனும் நடைபெறலாம் என்பதால் அதில் மாற்றம் செய்யப்பட்டது.