தேர்தல் செலவுகள்: பிகேஆர் தொடுத்துள்ள வழக்கில் பதில் அளிக்க நஜிப்புக்கு நீதிமன்றம் உத்தரவு

 

TI-internationalslamsnajib2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் செலவுகள் குறித்து பிகேஆரும் இதர எதிரணித் தலைவர்களும் தொடுத்துள்ள வழக்கில் பிரதமர் நஜிப் எதிர்வரும் அக்டோபர் 1க்குள் அவரது தற்காப்பு வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று உத்தவிட்டது.

இந்த வழக்கில் பாரிசான் அதன் தற்காப்பு வாதத்தை செப்டெம்பர் 15 லும், 1எம்டிபி மற்றும் தேர்தல் ஆணையம் அவற்றின் வாதங்களை செப்டெபர் 14 லும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவ்விவகாரம் இன்று துணைப் பதிவாளர் நூர் ஃபவ்ஸானி முகமட் நோர்டின் முன் வழக்கு நிர்ணயத்திற்கு வந்த போது அவர் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

இந்த வழக்கில் அடுத்த வழக்கு நிர்ணயம் அக்டோபர் 9 இல் நடைபெறும் என்றும், வழக்கை நீதிபதி முகமட் ஸாகி வஹாப் செவிமடுப்பார் என்றும் நூர் ஃபவ்ஸானி கூறினார்.