இந்திய பெருங்கடலிலுள்ள ரீயுனியன் தீவில் கரைசேர்ந்திருந்த ஒரு விமானத்தின் சிதைந்த பகுதி சேதமடைந்த மலேசிய ஏர்லைன்ஸ்சின் ஒரு பாகம்தான் என்று விதிமுறைகள்படி அடையாளம் காணப்பட்டுள்ளது என்று நேற்று பாரிஸில் குற்றவியல் அரசு வழக்குரைஞர் கூறினார்.
ரியூனியன் தீவில் ஜூலை 29, 2015 காணப்பட்ட அந்த விமானத்தின் சிதைந்த பாகம் எம்எச்370 பயண விமானத்தின் ஃபலேப்பரோன் என்ற பாகத்துடன் ஒத்திருக்கிறது என்று திட்டவட்டமாக உறுதிப்படுத்துவது சாத்தியம் என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அந்த எம்எச்370 கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு 239 பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களுடன் சென்று கொண்டிருக்கையில் காணாமல் போய் விட்டது.
சிதைந்த பாகமாகவே இருக்கட்டும். ஆனால் அது எங்கிருந்து வந்தது என்று சொல்ல மாட்டேங்கிரிங்களே! அது Diego Garcia தீவு சுட்டுவட்டாரத்தில் இருந்து வந்ததா அல்ல தென் இண்டியா மகா சமுத்திரத்தில் இருந்து வந்ததா? கிடைத்த பொருகளில் ஒட்டிக் கொண்டிருந்த நத்தை ஓடுகள் உங்களுக்கு எந்த ஒரு அடையாளத்தையும் காட்டவில்லையா?
புரியாத புதிர் , இரு பாகம் ,மற்ற பாகம் எங்கே ??????????
அன்னைக்கு இல்லை என்று சொன்னே ,இன்னிக்கு அதன் பாகங்கள் என்று சொல்லுறே .எல்லாமே இன்ச்சுரன்சுக்கு அடி போடுற மாதிரி இருக்கு ,மேலும் ஒரு புதிய கப்பல் வாங்கும் சதியா ? சனியன் புடிச்சவனுங்கள