“பெர்சே சுயேட்சையானதா?”, தேர்தல் ஆணையத் தலைவர் கேட்கிறார்

 

ECchiefஎதிர்வரும் சரவாக் மாநில தேர்தலில் தேர்தல் ஆணையம் பெர்சேயுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது. ஆனால், அதற்கு ஒரு நிபந்தனை உண்டு: அந்த அமைப்பு சுயேட்சையானதாக இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் அசிஸ் முகமட் யூசூப் இன்று கூறினார்.

“அது சுயேட்சையானதாக இருக்க வேண்டும். நமக்கு சுயேட்சையாக இல்லாத கண்காணிப்பாளர்கள் தேவை இல்லை”, என்றாரவர்.

நேற்று, சரவாக் முதலமைச்சர் அடினான் சாதெம் எதிர்வரும் மாநில தேர்தலின் போது பெர்சே மற்றும் இதர அரசு சார்பற்ற அமைப்புகளுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார்.

பெர்சேயை கண்காணிப்பாளராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது.

“பெர்சே சுயேட்சையானது என்று கூறுவீர்களா? பெர்சே சுயேட்சையானது என்று என்ணுகிறீர்களா?”, என்று அப்துல் அசிஸ் மீண்டும் மீண்டும் கேட்டார்.