பெர்சே 4 இன் தலைவர் மரியா சின் அப்துல்லா மற்றும் பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் சிம் ஸெ சின் ஆகிய இருவரும் மார்ச் 28 இல் நடைபெற்ற கித்தா லவான் பேரணியின் சம்பந்தமாக அடுத்த வாரம் அமைதியான ஒன்றுகூடுதல் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படுவர்.
பெர்சே அலுவலக உறுப்பினர் மண்டீப் சிங் மற்றும் ஜிங்கா 13 தலைவர் பாரிஸ் மூசா ஆகியோரும் செக்சன் 4(2)(c)இன் கீழ் குற்றம் சாட்டப்படுவர் என்று சிம் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
ஒன்றுகூடுவதற்கான மக்களின் உரிமையை மறுப்பதற்காக அம்னோ/பாரிசான் மேற்கொள்ளும் இந்த மூர்க்கமான நடவடிக்கைகளை தாம் வன்மையாக கண்டிப்பதாக சிம் மேலும் கூறினார்.
நஜிப்பின் நிர்வாகத்தில் மலிந்து கிடக்கும் ஊழல்கள் மற்றும் ஜிஎஸ்டி சுமைகள் ஆகியவற்றால் துன்பப்படும் மக்களின் அவலநிலைக்கு எதிராக தாம் போராட அஞ்சப்போவதில்லை என்றாரவர்.
மண்டீப் சிங் எதிர்வரும் குற்றச்சாட்டு குறித்து எந்த அச்சமும் கொள்ளவில்லை. தடுத்து வைக்கப்படுவது, காவலில் வைக்கப்படுவது மற்றும் நீதிமன்றத்துக்கு இழுக்கடிக்கப்படுவது போன்றவற்றை பார்த்தவர்கள் நாங்கள் என்று அவர் தமது முகநூலில் பதிவு செய்துள்ளார்.
அந்நால்வருக்கும் எதிரான குற்றச்சாட்டு பற்றிய செய்தி கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பு வெற்றிகரமாக முடிவுற்ற பெர்சே 4 பேரணிக்குப் பின்னர் வெளியாகியுள்ளது.
அதிகாரத்தை இவன்களிடம் கொடுப்பதும் மலர் மாலையை குரங்குகளிடம் கொடுப்பதும் ஒன்றுதானே. எப்படியாவது அடக்கி வேலை இல்லா ஈன காவல்களை ஏவி விட்டு மக்களை துன்புறுத்துவதே இந்த கம்மனாட்டிகளின் வேலை ஆயிற்றே.