கடந்த சில மாதங்களாக, நாடு அரசியல் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கையில் ரிங்கிட் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.
புகைமூட்டம் திரும்பி வந்துள்ளது, மலேசிய கால்பந்து குழு 10-0 அடிவாங்கியுள்ள வேளையில், பிரதமர் நஜிப்பும் அவரின் ரிம2.6 பில்லியன் நன்கொடை விவகாரமும் அனைத்துலக ஊழல்-எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பேராளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள முக்கிய விவகாரம் ஆகிவிட்டது.
ஆக, பிரதமரின் சகோதரர், நாஸிர் அப்துல் ரசாக், இவ்விவகாரங்கள் குறித்து தமது ஏமாற்றத்தைத் தெரிவித்திருப்பதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை.
“மலேசியாவுக்கு அனைத்துமே ஒட்டுமொத்தமாக மிக மோசமாகப் போய்க்கொண்டிருந்த ஒரு காலம் எனக்கு ஞாபகமில்லை.
“இதுவே பொழுதுபுலர்வதற்கு முன்பான மிகுந்த இருளாக இருக்கட்டும் என்று பிராத்திக்கிறேன்”, என்று நாஸிர் இன்று அவரது இன்ஸ்டகிரேமில் பதிவு செய்துள்ளார்.
நாஸி அடிக்கடி அவரது கருத்தை நுண்ணயமாக சமூக ஊடக வழி கூறியுள்ளார். ஆனால், இந்த மிக அண்மையப் பதிவு மலேசியாவை பற்றிய அவரது வேதனை மிகுந்த கருத்தாகும்.
ஆனால் விலைவாசிகளில் மட்டும் இறக்கமில்லை! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஏறிக் கொண்டிருக்கிறது!
மலேசியாவில் எல்லாம் சரிவுதான், நஜிப்பின் புகழ்மட்டும்தான் உலகளவில் உயர்வு.
மொத்த மலேசியர்களின் மன கலக்கத்தை படம் பிடித்து காட்டிவிட்டார்.
நஜிப் கிழே இறங்கினால் சரி ஆகிவிட்டும்
வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது மலேசியா.
மலேசிய மக்களை நன்கு புரிந்துக்கொண்ட அறிஞர் மண்ணாங்கட்டி .
நீங்களும் .நாங்களும் வருந்தி என்ன ஆகபோகுது ? சம்பந்தப்பட்டவர்கள் கடுக்காய் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்களே !
”இவ்வாண்டு பிரதமர் நஜிப் அவர்களுக்கு மலேசியா ஊழல் மன்னன் என்ற அ வாட் கிடைச்சிருக்காம் வாழ்துக்கள்.
“ஒரே மலேசிய நன்கொடை ஊழல் மன்னன்” அவார்ட்தான் பொருத்தமாக இருக்கும். இல்லையேல் பிரதமரின் அறிய கண்டுபிடிப்பான “நன்கொடையை” வேண்டுமென்றே ஒதுக்கி விட்டார்கள் என்று பிரதமரின் அடிவருடிகள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.